'குடித்துவிட்டு வீசப்பட்ட பெப்ஸி டின்களை சேகரித்து வாழும் இளைஞர்கள்' கைத்தொழில் அமைச்சர் முன்நிலையில் ஆவேசப்பட்ட எழுத்தாளர் இஸ்ஸதீன் றிழ்வான்


கடந்த 26/10/2017 அன்று கத்தார் அல்‍பனார் மாநாட்டு மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் இஸ்ஸதீன் றிழ்வான் ஆற்றிய உரையே இது.

கத்தார் அரசின் அழைப்பை ஏற்று இலங்கை ஜனாதிபதி சகிதம் கத்தார் வந்திருந்த கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரின் இலங்கையர்களுக்கான சந்திப்பு வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆரம்ப உரையாக இஸ்ஸதீன் றிழ்வான் தனது சுருக்க உரையை தொகுத்து வழங்கினார், பேசப்பட்டவைகள்:

1. முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் எல்லாக் காலங்களிலும் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வரவேண்டும்

2. முஹம்மது நபி, உமர் அலி போன்று நம் தலைவரகளும் நேர்மை, தியாகம், சமூக அக்கறை என்பவற்றை அடிப்படையாக கொண்டு தமது வாழ்க்கையை அர்ப்பணிக்கவேண்டும்,

3. இலங்கை முஸ்லிம்களுடைய கல்வி, பொருளாதாரம் மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளை முன்னேற்றுவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்,

4. சமூகத்தில் கல்வியின் பிந்தங்கி வாழ்வதால் கத்தார் போன்ற நாடுகளில் நம் இளைஞர்கள் பிறரால் குடித்துவிட்டு வீசப்பட்ட பெப்ஸி டின்களை விற்று வாழ்க்கை நடாத்தும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது, எதிர்காலங்களில் எமது பிரதேசங்களின் கல்விக்கூடங்களை தரமுயர்த்துவதும் தொழிநுட்பக் கல்லூரிகளை நிருவுவதற்கு உதவும்படி அமைச்சரை வேண்டினார்.

4. எதிர்வரும் தேர்தல்களில் மோசடிக்காரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது,

5. நேர்மையான தலைவர்களை இளைஞர்கள் ஆதரிக்கவேண்டும்

6. அரசியல் தலைவர்களை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தால் செல்பி எடுப்பதில் கவனம் செலுத்துவதை விட தம் சமூகத்தின் தேவைகளை கூறி பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும்

7. சாக்கடை அரசியலுக்கு பதில் சிறந்த அரசியலை செய்வதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும்.

Comments