(வீடியோ).,ஊடகமயப்படுத்தப்பட்ட கிடச்சி மடு பாலத்தினை அமைக்க முயற்சி எடுத்தமைக்காக ஹிஸ்புல்லாவிற்கு நன்றி செலுத்தும் சாட்டோ மன்சூர்..
Ihzana Fareed
மட்டக்களப்பு கல்குடா தொகுதி ஓட்டமாவடி பிரதேச சபை கோறளை பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் புணாணை மேற்கு கிராம சேவகர் பிரிவு ஆகிய நிருவாக பிரிவுகளுக்கு உட்பட்ட கிடச்சி மடு விவசாய கிராமத்திற்கு செல்லும் விசர் ஓடை ஆற்றுக்கான பாலம் இது வரை காலமும் அமைக்கபடாமையினால் பாரிய சவால்களை குறித்த பிரதேசத்தில் விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாய சமூகம் எதிர் நோக்கி வருகின்ற பிரச்சனை சம்பந்தமாக கடந்த 2016.12.23ம் திகதி சமூக ஆர்வலர் சாட்டோ மன்சூர் ஊடகங்களுக்கு கருத்துக்களை காணொளி மூலம் வெளியிட்டு சமூகமயப்படுத்தி இருந்தார்.
குறித்த பாலத்தினை அமைப்பதனுட்டாக ரிதிதென்ன புகையிரத நிலையத்திற்கு தெற்கு புறம்பாக முன்பாகச் செல்லும் விவசாயப் பாதை முடிவில் காணப்படும் குறித்த ஆற்றுக்கான பாலம் அமைத்தல் புணாணை மேற்கு ஆறு கண்டங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அனைவரும் பெரும் நன்மையடைவார்கள் என்பதனை சுட்டிக்காட்டுவதே சாட்டோ மன்சூரின் ஊடக அறிக்கையின் பிரதான காரணமாக அமைந்திருந்தது.
மேலும் குறித்த விடயத்தினை மையமாக வைத்து மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் அபிவிருத்திகள் மிக முக்கியமான விடயமாக கல்குடா பிரதேசத்தில் பேசப்பட்டு வருவதினாலும், ஜெயந்தியாய கிராமத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச பல்கலை கழகத்தினை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் தனிப்பட்ட முயற்சியினால் அமைகப்படுவது முக்கிய விடயமாகும்.
ஆகவே விவசாயிகள் எதிர் நோக்கும் முக்கிய போக்குவரத்து பிரச்சனையாக இருக்கின்ற குறித்த கிடச்சி மடுவிற்கு செல்லும் விசர் ஓடை பாலத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியிலும் ரிதிதென்ன ஜெயந்தியாய பிரதேசங்களில் தனக்கென நிரந்தர வாக்கு வங்கியினை கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய அரசியல்வாதியான இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் கவனத்திற்கு கல்குடா விவசாய சமூகத்தின் குறித்த பிரச்சனையினை மக்களின் சார்பாக சமர்ப்பிப்பதாக சமூக ஆர்வலர் சாட்டோ வை.எல்.மன்சூர் மேலும் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அதன் பலனாக இராஜாங்க மைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ் பிரதி அமைச்சர் அமீர் அலியையும் இணைத்துகொண்டு பல மில்லியன் ரூபாய்களை ஒதுக்கி குறித்த புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளமைக்கு தனது நன்றிகளை குறித்த விவசாய சமூகம் சார்பாகவும், கல்குடா மக்கள் சார்பாகவும் குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் சாட்டோ மன்சூர் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார். மன்சூர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
.

Comments
Post a Comment