வெலம்பொடையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்


இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கம் அதன் கிளை சங்கமான வட்டதெனிய இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கத்துடன் இணைந்து வெலம்பொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றை நடத்தியது.
கொழும்பு இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கத்தின் தலைவியான தேசமான்ய பவாஸா தாஹா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இளம் மாதர்களின் முஸ்லிம் சங்கத்தின் கருத்திட்ட தலைவியான தேசமான்ய மக்கியா முஸம்மில் உப தலைவியான தேசமான்ய மர்ளியா சித்தீக் வட்டதெனிய இளம் மாதர்களின் முஸ்லிம் சங்க தலைவியான ஜொஹைரியா கபூர் செயலாளரான பரீதா நஸீர் சுரைய்யா ரிஸ்வி பொருளாளரான கனீஸ் மலிக் உட்பட ஏனைய சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த இலவச கண் சிகிச்சை முகாமுக்கு தேசமான்ய மர்ளியா சித்தீக் அனுசரணை வழங்கினார். முஸ்லிம்கள் மட்டுமன்றி சிங்கள் தமிழ் மற்றும் கிருஸ்தவ மதங்களைச்சேர்ந்த சுமார் முந்நூறு பேரளவில் இந்தக் கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு இலவசமாக மூக்குக்கண்ணாடிகளைப் பெற்றுக்கொண்டனர்.
– நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் –

Comments