அ.இ.ம.காங்கிரஸ் காரர்கள். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்து விட்டார்களா?
அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 20வது மாகாணசபை திருத்தச்சட்டமூலம் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் அவசர அவசரமாக அரசாங்கம் மாகாணசபை தேர்தல் சட்டதிருத்தம் ஒன்றை கொண்டுவந்து சாதாரண பெரும்பாண்மையோடு நிறைவேற்ற முற்பட்டபோது.
இது முஸ்லிம் சமூகத்தின் இருப்பை பாதிக்கக்கூடிய சட்டதிருத்தம் ஆகவே எல்லா சிறுபாண்மை கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து இந்த சட்ட திருத்தத்தை எதிர்க்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தார்கள்.
கடைசி நேரத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் ஆதரவு இல்லாமலே, சாதாரண பெரும்பாண்மையை பெற்று இந்த சட்டதிருத்தத்தை அரசாங்கம் நிறைவேற்ற முயற்சித்தவேளை, அ.இ.ம.காங்கிரஸ் பிரதிநிதிகளும் அவர்களுடைய சட்டத்தரணி ருஷ்தி கபீப் அவர்களும் உடனடியாக சட்டமா அதிபரை சந்தித்து இந்த சட்டமூலம் தேர்தல் சட்டதிருத்தமாக இருந்தாலும், மக்களின் உரிமையான வாக்களிக்கும் உரிமையை பாதிக்கின்றபடியால் இதனை சாதாரண பெரும்பாண்மையை கொண்டு நிறைவேற்றுவது பிழையான விடயமாகும் என்று, சட்டமா அதிபருக்கு எடுத்துக்கூறி, இந்த சட்டதிருத்தம் வழுவானதாக இருக்கவேண்டுமானால் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையூடாகத்தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்களாம். அதனை ஏற்றுக்கொண்ட சட்டமாதிபர் அதன் படியே செயல்பட அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியதாக, பகிரங்கமாகவே கூறிவருகின்றார்கள்.
இவர்களின் நோக்கம் என்னவென்றால், மூன்றில் இரண்டு பெரும்பாண்மை தேவைபட்டால்தான் சிறுபாண்மை கட்சிகளின் உதவி அரசாங்கத்துக்கு தேவைப்படும், அந்த நேரம் நாம் எதிர்த்து வாக்களித்து பிரேரணையை தோற்கடித்து விடலாம் என்ற நினைப்பேயாகும்.
ஆனால் நடந்தததோ வேறுவிடயம், இதனை அறிந்த அரசாங்கதரப்பினர் ஏதோ ஒரு வகையில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற்றுக்கொள்ள முயற்சித்ததன் காரணமாக, மு.காங்கிரஸ் போன்ற கட்சிகள் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்க முன்வந்தபோது அரசாங்க தரப்புக்கு 152 பேர் சேர்ந்துவிட்டதாக அறியக்கிடைத்துள்ளது.
அதன் பின் அரசாங்க தரப்பை சேர்ந்த சில பேர் அ.இ.ம.காங்கிரஸ் காரர்களையும் அதட்டி மிரட்டி வழிக்கு கொண்டுவந்து விட்டார்கள், அதன் காரணமாக நாம் அரசாங்கத்தின் வீண்பழியை சுமக்க விரும்பாததன் காரணமாகவும், நாம் வாக்களிக்காது விட்டாலும் பிரேரணை வெற்றியடையும் என்ற காரணத்தினாலும், கடைசி நேரத்தில் பிரதமர் ரணில் அவர்கள் இவர்களுடைய சில ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டதன் காரணமாகவும், வேறுவழியில்லாமல் பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க முன்வந்தோம் என்று கூறி, இப்போதும் அவர்கள் ஒப்பாரி வைப்பதை அறிந்து வருகின்றோம்.
ஆக, இந்த சட்டமூலம் சிறுபாண்மையினருக்கு பிழையானது என்றும், முழு முஸ்லிம் பிரதிநிதிகளும் ஒற்றுமையாக நின்றிருந்தால் இந்த பிரேரணையை தோற்கடித்திருக்க முடியும் என்று இப்போதும் அவர்கள் சகல இடங்களிலும் கூறித்தெறிவதை பார்த்தால், இப்போதும் இந்த சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்பதை சொல்லாமல் சொல்லி அழுவதைத்தான் அவதானிக்ககூடியதாக உள்ளது.
இப்போது விடயத்துக்கு வருவோம்...;
முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இந்த சட்டமூலம் சாதாரண பெரும்பாண்மை மூலம் நிறைவேற்றப்பட்டிருந்தால், ஒருவேளை அந்த சட்ட திருத்த நிறைவேற்றம் பிழையானது என்று நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்வதற்கும் காரணமாக இருந்திருக்கும் அல்லவா? அதன் மூலம் நாம் விரும்பாதவொரு சட்டமூலம் ஏதோ ஒரு வகையில் இல்லாமலாகும் சந்தர்ப்பமும் கிடைத்திருக்கும் அல்லவா?
ஆனால் அ.இ.ம.காங்கிரஸ் காரர்கள் சட்டமாஅதிபருக்கு இதன் விடயத்தை விரிவாக விளங்கப்படுத்தி மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நிறைவேற்ற ஆலோசனை வழங்கியதன் காரணமாக, நீதிமன்றத்தால் நிராகரிக்கமுடியாதளவுக்கு மிக இறுக்கமாக இந்த சட்டமூலத்தை நிறைவேற்றி வைத்ததன் மூலம், மறைமுகமாக நாமே நமது தலையில் மண்ணை அள்ளிப்போட்டதற்கு நிகரான விடயத்தை அல்லவா இவர்கள் செய்துள்ளார்கள் என்றல்லவா கேட்கவேண்டியுள்ளது.
சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஒருவன் என்பது போல், மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் சட்டதிருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நீங்கள்தான் பின்னாலிருந்து செயல்பட்டுள்ளீர்கள் என்பது யோசிக்கவேண்டிய விடயம் என்பதுதானே அர்த்தம்.
அதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு பெரியதொரு இழப்பை ஏற்படுத்திவிட்டீர்களா? என்ற கேள்விக்கு இதில் சம்பந்தப்பட்ட நீங்கள்தான் பதில் தறவேண்டும்.
உரியவர்கள் இதற்கு பதில் தறுவார்களா என்று பார்ப்போம்.
எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.


Comments
Post a Comment