டான் பிரியஷாத் உள்ளிட்ட அறுவர் சி.சி.டி.யால் கைது
ஒக். 9 வரை விளக்கமறியல்; மேலும் இருவருக்கு வலை வீச்சு
கல்கிசை பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை அச்சுறுத்தி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் டான் பிரியஷாத் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இருவரை தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கல்கிசைப் பொலிஸ் பிரிவில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகத்தின் பாதுகாப்பின் கீழ், மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் செய்த அத்துமீறல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் முன்னின்று செயற்பட்ட டான் பிரியஷாத் எனும் நபர், பெண் ஒருவர் உள்ளடங்கலாக ஆறு பேரே இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவர்களை கைது செய்ய தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரில் ஒருவர் நீதிமன்றினால் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய ஐவரும் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இடம்பெறும் விசாரணைகளில், இந்த அத்துமீறல்களுடன் தொடர்புடையோர், அவ்வாறான மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு காரணம் உள்ளிட்ட பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அவை தொடர்பில் மேலும் உறுதி செய்ய தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"சிங்ஹலே அபி" எனும் தேசிய அமைப்பு சார்பில் அக்மீமன தயாரத்ன தேரர், தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரக பொறுப்பில் இருந்த அகதிகளுக்கு எதிராக முற்றுகை ஆர்ப்பாட்டம் கல்கிசைப் பகுதியில் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் முன்பாக இடம்பெற்றது.
இதன்போது அவர்கள் தங்கியிருந்த வீடும் சேதப்படுத்தப்பட்டதுடன் இரு பொலிஸாரும் காயமடைந்திருந்தனர். இதன்போது குறித்த அகதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த அகதிகளை மிரிகானை தடுப்பு முகாமுக்கு வெளியே எங்கேனும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க கல்கிசை நீதிவனிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவுக்கு அமைய அவர்கள் காலி, பூசா முகாமில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே கடந்த வியாழன் அன்று ( செப் 28) இந்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை ஒன்றினை முன்னெடுக்கும் பொறுப்பு பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சி.டி. விக்ரமரத்னவின் உத்தரவுக்கு அமைய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் (சி.சி.டி.) கையளிக்கப்பட்டது.
இந் நிலையில், நேற்று முதல் விசாரணைகளை ஆரம்பித்த கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகத்தின் பாதுகாப்பின் கீழ் , மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் செய்த அத்துமீறல்கள் தொடர்பில் தொலைக்காட்சி நிறுவனங்களினால் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ காணொளிகளைப் பெற்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.
குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சந்ரதிலக, பிரதான பொலிஸ் பரிசோதகரும் அந்த பிரிவின் பொறுப்பதிகாரியுமான நெவில் டி சில்வாவின் கீழ் மூன்று பிரத்தியேக குழுக்கள் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்தன.
இந் நிலையில், கடந்த வெள்ளியன்று (செப். 29) இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முதலாவது சந்தேக நபரை பம்பலபிட்டி பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்தனர். பொதுபல சேனா அமைப்பின் முன்னாள் தீவிர செயற்பட்டாளரும் பொதுபல சேனா கடந்த பொதுத் தேர்தலில் களமிறக்கிய பொதுஜன பெரமுன எனும் கட்சியின் மொறட்டுவைத் தொகுதியில் போட்டியிட்டவருமான 34 வயதுடைய, மொரட்டுவை றாவத்தாவத்தவைச் சேர்ந்த வீரசேகரகே டெஷாந்த சமிருவான் ரொட்ரிகோ என்பரை கைது செய்தனர். இந்நிலையில், அவரை மறு நாள் கல்கிசை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்த பொலிஸார் அவரை எதிர்வரும் அக்டோபர் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்தனர்.
இந் நிலையில், தொடர்ந்து நேற்றுமுன் தினம் (செப். 30) விஷேட நடவடிக்கையினை முன்னெடுத்த பொலிஸார் காலைவேளையில், கல்கிசைப் பகுதியில் வைத்து பெண் ஒருவரைக் கைது செய்தனர். 43 வயதுடைய கல்யாணி பொடி மெனிகே எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான கல்கிசை அத்துமீறல்களின் போது, முன்னின்று செயற்பட்டமையை பொலிஸார் ஆதாரத்துடன் கண்டறிந்துள்ளனர்.
இந் நிலையில், மேலும் ஆறு பேரை வீடியோ காணொளிகள் ஊடாக அடையாளம் கண்ட பொலிஸார் அவர்களைக் கைது செய்ய அவர்கள் வசிக்கும் பிரதேசங்களுக்கு சென்ற போதும் அவர்கள் தலைமறைவாகியிருந்தனர். இந் நிலையில், நேற்று முன் தினம் மாலை விஷேட பொலிஸ் நடவடிக்கைகளை முன்னெடுத்த பொலிஸார், இந்த அகதிகள் மீதான அத்துமீறல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அடையாளம் காணப்பட்ட பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான டான் பிரியஷாத் என அறியப்படும் சந்தேக நபர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்தனர்.
வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 31 வயதுடைய டான் பிரியஷாத் எனப்படும் லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத், 45 வயதுடைய கனேமுல்லையைச் சேர்ந்த ஜனித நிரோஷன தீபகே, 44 வயதுடைய அக்பர் நகர், எடேரமுல்லையைச் சேர்ந்த நாவலகே டொன் சிந்தக சஞ்சீவ, நாவல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய என்.ஜி.கே. கயான் மதுஷான் செனவிரத்ன ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இவர்களும் கைதான பெண்ணும் நேற்று கல்கிசை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது மதுஷான் செனவிரத்ன பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனைய அனைவரும் எதிர்வரும் அக்டோபர் மாதம் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந் நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் அனைவரும் 9 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இதனைவிட அடையாளம் காணப்பட்ட மேலும் இரு சந்தேக நபர்களை தேடும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நேற்று சந்தேக நபர்கள் மன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது பாதிக்கப்பட்ட ரோஹிங்யா அகதிகள் சார்பில் ஆர்.ஆர்.டி. அமைப்பின் சார்பில் சட்டத்தரணி சிந்தக ரன்கொத்கே மன்றில் ஆஜரானார். அவர் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு கடும் ஆட்சேபனை வெளியிட்டார். அத்துடன் சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார் தண்டனை சட்டக் கோவையின் அத்தியாயங்களை மட்டும் உள்ளடக்கி குற்றச்சாட்டினை முன்வைத்திருந்த நிலையில், ஐ.சி.சி.பி.ஆர். எனப்படும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் ஏன் முன்வைக்கப்படவில்லை என சட்டத்தரணி சிந்தக ரன்கொத்கே கேள்வி எழுப்பினார். சந்தேக நபர்களுக்கு எதிராக சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டுச் சட்டத்தின் 3(4) ஆம் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என இதன்போது சட்டத்தரணி சிந்தக சுட்டிக்காட்டினார்.
இதனை அடுத்து மன்றில் ஆஜரான சட்டத்தரணி அது தொடர்பில் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடி மன்றுக்கு அறிவிப்பதாக தெரிவித்தார்.
குறிப்பாக ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளுக்கு எதிராக திடீரென முன்னெடுக்கப்பட்ட இந்த அத்துமீறல்களின் பின்னணி தொடர்பில் விசாரணையாளர்கள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அகதிகள் மிரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த போது, சுகயீனமுற்று களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அகதி இளம் பெண் ஒருவர், பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார். கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பிலான வழக்கு பீ/ 2030 /17 எனும் இலக்கத்தின் கீழ் நடைபெற்று வருகின்றது.
இதில் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தரான டி.பி.ஜி. குணவர்தன வாசை பாதிக்கப்பட்ட யுவதி அடையாளமும் கண்டிருந்தார். இந் நிலையில், அது தொடர்பில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையைக் கருத்தில் கொண்டே மிரிகானைக்கு வெளியே ரோஹிங்ய அகதிகளை தங்கவைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந் நிலையில், இந்த பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தின் பிரதான சாட்சியாளர்களாக பாதிக்கப்பட்ட யுவதியும் அவரது மைத்துனரான மொஹம்மட் அமீன் என்பவருமே உள்ளனர். இந்நிலையில் ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளை முடியுமான வரை அவசரமாக நாடு கடத்துவதன் ஊடாக இந்த வழக்கில் இருந்து தப்பிக் கொள்ளலாம் எனும் எண்ணத்தில் அகதிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டமும் அத்து மீறலும் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அத்துமீறல்களின் போது, துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டமை ஊடாக இந்த தகவல்கள் மற்றும் சந்தேகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கல்கிசையில் ரோஹிங்ய முஸ்லிம் அகதிகள் மீதான அத்துமீறல்கள் சிலரால் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதில் கலந்துகொண்ட ஏனையோர் உண்மை நோக்கத்தை அறியாது சட்டவிரோத கும்பலின் உறுப்பினர்களாக செயற்பட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளனர். எனினும் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் உறுதி செய்துகொள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இதனிடையே, ரோஹிங்ய முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு சொந்தமான பூசா முகாம் அருகில் தேரர்கள் உள்ளிட்ட எவருக்கும் ஆர்ப்பாட்டம் செய்யவோ, தரித்து நிற்கவோ முடியாது என தெரிவித்து காலி நீதிவான் நிசாந்த பீரிஸ் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். பூஷா அருகிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெறலாம் என உளவுத் துறைக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக ரத்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் கிரியெல்ல நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கை பிரகாரம் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment