திஹாரிய தாருஸ்ஸலாம் மாணவி மாவட்டத்தில் முதலிடம்
மேல் மாகாணம் கம்பஹா வலய திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை மாணவி எம்.என். மர்யம் கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளைப் பெற்று கம்ஹா மாவட்டத்தில் தமிழ் மொழி மூலத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
குறித்த பாடசாலையில் தரம் ஐந்து ஏ வகுப்பில் கல்வி பயிலும் இம்மாணவிக்கு வகுப்பாசிரியர் எம்.எம்.என். பரீதா, அதிபர் எம்.எப்.எம். ஸபீர் மற்றும் பிரதி அதிபர் எம்.ஏ.எம். அஸாம் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இம்மாணவி, எம்.எஸ்.எம். நுஸ்கி மற்றும் எம்.எஸ்.எம். இம்திகா ஆகியோரின் செல்வப் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment