புத்தளம் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று முஸ்லிம் மாணவன் சாதனை
மாஷா அல்லாஹ், இம்முறை நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 186 புள்ளிகளைப் பெற்று MOHAMED AATHIR AASH AHMED எனும் மாணவன் இரண்டாம் இடத்தைப் பெற்று தன் குடும்பத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தற்பொழுது புத்தளம்-தில்லையடி, அல்ஜித்தா நகரில் வசித்துவரும் ஜௌபர் ஜெஸானா மற்றும் ஆதிர் தம்பதியனரது முதல் செல்வப் புதல்வரான இவர் புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வுயர் அடைவுக்கு காரணமாக அமைந்த அல்லாஹ்வுக்கு முதலில் நன்றி செலுத்தும் இதேநேரம், இம்மாணவனை சிறப்பாக கற்பித்து, நல்ல பெறுபேறுக்கு வித்திட்ட பாடசாலை, அதன் அதிபர் மற்றும் அனைத்து ஆசிரியர் குழாமுக்கும் நன்றி கூறுவதில் பேரானந்தமடைகிறோம்.
Jazakumullahu khaira
வல்லவன் அல்லாஹ், இவரது அறிவில் பரகத் செய்து, பெற்றோருக்கு பணிவிடை செய்யும் சிறந்த மகனாக ஆக்கியருளுவதோடு மென்மேலும் உயர் அடைவுகளை அடையும் பேற்றையும் வழங்குவானாக! ஆமீன்
الحمد لله الذي بنعمته تتم الصالحات
தகவல்:
Ash Sheikh Azhan Haneefa (Madani)
Husainiyapuram-Puttalam


Comments
Post a Comment