உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான அறிக்கை இன்று சபையில் விவாதத்துக்கு


அரசியலமைப்பு உருவாக்க செயற்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்று (30) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த விவாதம் எதிர்வரும் புதன்கிழமை வரையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இடைக்கால அறிக்கை சகல கட்சிகளினதும் முன்மொழிவுகளை உள்ளடக்கியதாக காணப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கூட்டு எதிர்க் கட்சியினர், தங்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் இந்த அறிக்கையில் உள்வாங்கப்படவில்லை எனவும் இதனை தாங்கள் எதிர்க்கவுள்ளதாகவும் பந்துல குணவர்தன எம்.பி. நேற்று(29) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Comments