தனியலகு கோரிக்கை முட்டாள்தனமானது
ஜனாதிபதி சட்டத்தரணி ஸுஹைர்
வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு தனியான அலகு உருவாக்கப்பட வேண்டும் என கோருவது ஆபத்தானதாகும். இது ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களையும் குர்பான் கொடுக்கும் முட்டாள்தனமான முயற்சியாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். ஸுஹைர் தெரிவித்தார்.
1987 இல் இருந்த நிலைமைக்கும் தற்போதுள்ள நாட்டின் நிலைமைக்குமிடையில் பாரிய வேறுபாடுள்ளது. இதனை மனதில் கொண்டே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு தனியான அலகு உருவாக்கப்பட வேண்டும் எனும் தமது கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியிருப்பது தொடர்பில் கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸுஹைர் மேலும் கருத்து வெளியிடுகையில், புதிய அரசியலமைப்பு தொடர்பான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். எனினும் இது தொடர்பில் இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை.
இன்னும் கலந்துரையாடல் மட்டத்திலேயே இவை உள்ளன. இந் நிலையில் நாம் முஸ்லிம்களுக்கான தனியலகு பற்றி பகிரங்கமாக ஊடகங்கள் வாயிலாக கோரிக்கைகளை முன்வைப்பது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத, மதவாத அலையைத் தோற்றுவிக்கவே வழிவகுக்கும். இது முஸ்லிம் சமூகத்தையே குர்பான கொடுப்பதற்கு ஒப்பானதாகும்.
வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றிய விடயங்கள், சம்பந்தப்பட்ட தரப்புகளோடு ஆழமாக கலந்துரையாடி தீர்மானிக்கப்பட வேண்டியவையாகும். இதில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரை தெ ளிவுபடுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையில் நாம் முந்திக் கொண்டு தனியலகு கோரிக்கையை முன்வைக்க கூடாது.
இந்தக் கோரிக்கை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தப்பபிப்பிராயங்களைத் தோற்றுவிக்கவும் அவர்களுடனான முஸ்லிம்களின் நீண்ட கால உறவில் பாதிப்பை ஏற்படுத்தவுமே வழிவகுக்கும்.
ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியாக இருந்தபோது இலங்கை – இந்திய ஒப்பந்தம், 1987 ஜூலையில் கைச்சாத்திடப்பட்டது. அப்போது முஸ்லிம்களிடம் இது தொடர்பில் கருத்துக்கள் எதுவும் பெற்றிருக்கவில்லை. இதன்மூலம் இணைப்பை ஏற்றுக் கொள்ள முஸ்லிம்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
அதேநேரம் சிங்களப் பொதுமக்களும் வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களும் கூட இணைப்புக்கு எதிராக உள்ளனர். கிழக்கில் தமிழர்கள் 40 வீதமே உள்ளனர். ஏனைய 60 வீதமானோர் தமிழர்கள் அல்ல.
மேலும் முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு இணைப்பை விரும்புகின்றார்களா என்ற கேள்வியை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுதலே முக்கியமாகும். இன்றைய சூழல்நிலையில் தனியலகு கோரிக்கைகள் இனவாத கலவரத்திற்கு விதைத்திடலாம்.
எனவே, இன்னுமொரு இனக் கலவரத்துக்கு அடிகோலாமல் இரு மாகாணங்களுக்கும் தேவையான சாத்தியமான அளவு அதிகாரப் பரவலாக்களைப் பெற்று நாட்டில் அனைவரும் சுமுகமாக வாழும் ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments
Post a Comment