உச்சகட்ட கோபத்தில் மஹிந்த! அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை குறித்து மந்திராலோசனை
ஜப்பானுக்கான விஜயத்தை அவசரமாக நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களை சந்தித்து முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்பு இன்றைய தினம் தங்காலையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்சவின் கார்டன் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த சந்திப்பில், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சியினர் மீதான தொடர் அடக்குமுறைகள் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தங்காலை சிறைக்கு சென்று நாமல் ராஜபக்ஸவைப் பார்ப்பதற்காக இன்று காலை தங்காலை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கடும் கோபத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment