வல்லப்பட்டைகளுடன் குவைத் பிரஜை கைது


சட்டவிரோத வல்லப்பட்டைகளுடன் தாய்லாந்தின் பேங்க்கோக் நகருக்கு செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த வல்லப்பட்டை தொகை 4 கிலோ 500 கிராம் நிறையுடையது எனவும் அதன் பெறுமதி 154,000 ரூபா எனவும் சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட பொருட்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments