மஹிந்தவை சுற்றி வளைக்கும் புலனாய்வு பிரிவு!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜப்பான் விஜயம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எதுவித முன்னறிவிப்பும் இன்றி மஹிந்த ஜப்பான் சென்றுள்ளமை தொடர்பில் புலனாய்வு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

மஹிந்தவின் ஜப்பான் விஜயத்தில் அவரது இளைய மகன் யோஷித ராஜபக்ஷவும் இணைந்திருந்தார்.

எனினும் முன்னறிவிப்பின்றி முன்னாள் ஜனாதிபதி வெளிநாட்டு சென்றுள்ளமை தொடர்பில் புலனாய்வு பிரிவுகளுக்கு இடையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு விஜயங்களில் ஈடுபடும் ராஜபக்ஷர்கள், அந்நாடுகளில் கிடைக்கும் நிதியை இலங்கைக்கு கொண்டு வருவது வழக்கமான விடயமாகும்.

இந்த நிதி பரிமாற்றம் தொடர்பில் இலங்கை புலனாய்வு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது ராஜபக்ஷர்களால் பெருமளவு நிதி வெளிநாடுகளில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அவ்வாறு வைப்பிலிடப்பட்ட பணம் மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக புலனாய்வு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் நடவடிக்கையில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க செயற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், உதங்க வீரதுங்கவை சந்திக்கின்றனரா என்பது தொடர்பிலும் புலனாய்வு பிரிவினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை கடந்த வார இறுதியில் அனுராதபுரம் சென்றிருந்த மஹிந்த, பிரபல ஜோதிடம் பார்க்கும் பெண்ணொருவரை சந்தித்திருந்தார். இதன்போது பாரிய பூஜை ஒன்றையும் மஹிந்த தரப்பினர் நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments