கந்தளாய் கல்வி வலயத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.தாரீக் (நளிமி) நியமனம்.
கந்தளாய் கல்வி வவலயத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளராக முகம்மது தாஹிர் முகம்மது தாரிக் (நளிமி) நியமிக்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் கல்வி வலயத்தில் சேவையாற்றிய ஜனாப்.எம்.ஜூனைதீன் ஓய்வுபெற்றதையிட்டு ஏற்பட்ட வெற்றிடத்திற்கே எம்.டி.எம்.தாரிக்(நளிமி) நியமிக்கப்பட்டுள்ளார்.
1998 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்துகொண்ட ஜனாப்.எம்.டி.எம்.தாரிக்(நளிமி) பேரதனைப் பல்கலைக் கழத்தின் பட்டதாரியாவார். ஆசிரியர் சேவையினுள் உள்வாங்க முன்பதாக ஜாமியா நாளீமியா கலா பீடத்தின் நளீமீ பட்டத்தினையும் கல்விச் சேவையினுள் உள்வாங்கப்பட்ட பின்னர் பாடசாலை முகாமைத்துவத்தின் டிப்ளோமாவையும் பூர்த்திசெய்துள்ளார்.
இவர் தனது கல்விச் சேவைக் காலத்தினுள் ஆசிரியராகவும் பின்னர் அதிபர் தரம்-11 இற்கான பரீட்சையில் சித்தியெய்தி கந்தளாய் தி/அல்-தாரிக் மகா வித்தியாலயத்தின் அதிபராகவும், பின்னர் கந்தளாய் வலயக் கல்விப் பணிமனையில் செயற்றிட்ட அதிகாரியாகவும், அதன் பின்னர் கந்தளாய் தி/அஸ்-ஸபா வித்தியாலயத்தின் அதிபராகவும் சேவையாற்றியுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் கிழக்கு மாகாணக் கல்விச் செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment