முன்னாள் அமைச்சர் நஸீரினால் கோணவத்தை பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி கையளிப்பு
அட்டாளைச்சேனை, கோணவத்தை ஜும்மா பள்ளிவாயலுக்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஏ எல் முஹம்மட் நஸீர் அவர்களின் ரூபா 02 இலட்சம் நிதியில் ஒலிபெருக்கி உபகரணங்கள் இன்று (20) இஷா தொழுகைக்கு பின் வழங்கி வைக்கப்பட்டது.
இப்பள்ளிவாயலுக்கு நீண்ட காலமான தேவையாக இருந்த இச்சாதணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டு இப்பள்ளிவாயலுக்கான ஒலி பிரச்சினைக்கான தீர்வு முன்னாள் அமைச்சர் ஏ எல் முஹம்மட் நஸீர் அவர்களினால் தீர்த்து வைக்கப்ப்ட்டது.
இதன் போது பள்ளிவாயலின் தலைவர் அமீன், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் ரீ. ஆப்தீன் உள்ளிட்டோருடன் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


Comments
Post a Comment