கிண்ணியா மீனவனின்  பிரச்சனைக்கான  தீர்வுகள்



கிண்ணியாவின் ஆரம்பத் தொழில்  முத்துக் குழிப்பில் இருந்து  தோன்றுகின்றது  எமது  மீன் பிடி வரலாறுகள். இன்று  உலகம் மீன் பிடியில்  போட்டி போட்டு  முன்னேறும் போது  கிண்ணியா மீனவர்கள்  மட்டும்  பாதிப்பு அடையும் நிலை கண்டுள்ளது. எம்மிடம்  பத்து  குளங்களும்  பல ஆறுகளும்  வங்கள  குடவையும்  கொண்ட  நமக்கு  நாங்கு  திசைகளிலும்  கடல் நீரினால்  சூழ்ந்து கலப்பு  நிலங்கள்  இருப்பதினால்  மீன்களின்  பிரதான  உணவு  "பிளாண்டன்"  நிறைந்து  காணப்படுவதால்  மீன் வரவுகள் அதிகமாகியும்  நாம்  பின் தங்கிய நிலைக்கு  காரணம் ஏது.

எதுகெடுத்தாலும்  அரசாங்கத்தை குற்றம் காணுமுன்னாடி  நம்மை  நாம் நோக்குவோம். எனது  வாப்பா  கிண்ணியாவில்  அன்று அதாவது 65வருடங்களுக்கு முன்னாடி  வெண்ணப்புவ , தல்வில, மாரவில, மற்றும் நீர்கொழும்பு  சிங்களவர்கள் ஐம்பதுக்கும்  மேற்ப்பட்டவர்களை வைத்து  கங்கை,  உப்பாறு , சீனக்குடா, நிலாவெளி  போன்ற  இடங்களில்  முதல்  முதலில்  இழுவலை [ கரவலை ]  போட்டு  தொழில்  வாய்ப்பு  வழங்கிய  கடலும்  மண்ணும்  கிண்ணியாவாகும். ஆனால்  இன்று  ஊரிலுள்ளவனுக்கே  தொழில்  செய்ய முடியாத  நிலை காணும் போது  மனம்  அழுகின்றது.

 அதே  கரவலை  அதே  சிறு படகுகள். காலத்துக்கு  ஏற்றாப்  போல் நாங்கள்  நவீன மயமாகவும்  இல்லை  இன்றைய  நவீன மீன் பிடி சம்பந்தமான  அறிவுகளையும்  பெறவுமில்லை. இன்றைய  சங்கங்களும்  உருதியானதாகவும்  இல்லை. சங்கங்கள் அனைத்தும் முதலாளிகளின்  கட்டுப்பாட்டில்  இருப்பதால்  கடலில் இறங்கி மீன் பிடிப்பவனை  நம்பி வாழும்  முதலாளிகளுக்கு  அப்பாவி மீனவன் பலியாகின்றான்.

அதனால்  கடலில் இறங்கி  மீன் பிடிப்பவனுக்கு  ஒரு  சங்கம்  இருக்க வேண்டும் அதன்  நிருவாகம் அவன் கையிலேய இருக்க வேண்டும். அனைத்து  தேவைகளையும்  மீனவன்  தேட வேண்டும். முதலாளிகள்  தங்களுக்கு ஒரு சங்கத்தை  தோற்று வித்து அவர்கள் சார்ந்த  தேவைகளை  அதைக் கொண்டு  தேடவேண்டும். இந்த  சங்கங்கள்  ஒன்றாக  இருப்பதால் வரும் பிரச்சனைகளுக்கு  பலியாவது  அப்பாவி  மீனவந்தான்.

அதாவது  மீனவன்  படிப்பறிவில்  குறைந்தவனாக  இருக்கின்றான். அவன் பத்து  வருடங்களுக்கு  முன்  முதலாளியிடம்  1000, ரூபாய் கடன் வாங்கினால்  அதைக் கொடுக்கும் வரை  தனது  வோர்ட்டில்  பிடிக்கும்  மீனை அந்த  முதலாளிக்குத்தான்  கொடுக்க வேண்டும். ஆனால்  முதலாளி  கொழும்பி  தன்  தேவைக்காக  கடன் வாங்கி இருப்பதால்  கொழும்பு  முதலாளி  போடும் விலைதான்  கிண்ணியா முதலாளி  வாங்க வேண்டும்.  இதனால் , உண்மையான  மீனின் விலை  அங்கு  குறைவதால் மீனவனுக்கு  மிகவும்  விலை  குறைவடைகின்றதால்  மிகவும்  வறுமை நிலை காணுகின்றான்  அப்பாவி  மீனவன். இது மட்டும் இல்லை  இன்று  விலை குறைப்பால்  தூண்டல், வீச்சுவலை கூடு  போட்டு  மீன் பிடித்தல்  என்பன   மந்த நிலை  கண்டுள்ளது   இதை  நிபர்த்தி  செய்ய  நாம்  எடுக்கும்  முடிவானது.

கிண்ணியா  மீனவனுக்கு  என்ற ஒரு அரச ஐஸ்  உற்ப்பத்தி  நிலையம்  கிண்ணியாவில்  வேண்டும்.இதனால்  ஒரு  வோர்ட்  வைத்திருக்கும்  சாதாரண  மீனவன் கூட  தனது  மீனை  தான்  கொழும்பு  கண்டி  போன்ற  மார்கட்டுகளுக்கு  அனுப்பி  முழு  விலைகளையும்  அவனால்  பெற முடியும். நல்ல  இலாபத்தால்  பணப்புழக்கம்  கூடி  அப்பாவி  மீனவனின்  வறுமை  ஒரு  அளவாவது  குறைய வழி வகுக்கும்

கணரக  வோட்டுக்கள்  வலைகளை  வாங்கி  ஆழ் கடலுக்கு  பல  நாற்கள் தங்கி  மீன்  பிடிக்கு  முறைகளை  கையாளவேண்டும். இதுக்குறிய  முதலீடுகளும்  அறிவாற்றல்களையும்  நாம்  பெற்றுக்கொண்டால்  கடல்  மேலிருந்து  நாங்கள்  கரையில்  தொடர்பு கொண்டு  அன்றைய  மீனின்  விலைகளையும்  அறிந்து  கொண்டு  எமது  வியாபாரத்  தந்திரங்களைக் கடைப்பிடிக்கலாம்.  உ+ம் " கரையில்  மீன் இல்லை  என்றால்  விரைந்து  வந்து  எமது  மீனை  கூடிய விலைக்கு விற்க்கலாம் " அதே  போல்  கொழும்பு  மார்கட்டையும்  அறியலாம்  இதுதான்  இன்று  சிங்களப் பிரதேச  மீனவர்கள்  கடைப்பிடிக்கும்  உத்தியாகும்.

இன்று  கிண்ணியா  மீனவர்கள்  மாத்திரந்தான்  சிறிய படகுகளை  வைத்து  மீன் பிடிக்கின்றாா்கள்  அருகிலுள்ள  மூதூர், சீனக்குடா, புடவைக்கட்டு, புல்மோட்டை  மற்றும்  ஏனைய  ஊர்களில்  பெரிய  வோர்ட்களும்  கட்டு வலை  அடவலை,  தூண்டல்  மூலம்  பட்டை அடித்து  மீன் பிடிப்பு,  லைட்  இறக்கி  வலை  போட்டு  பிடித்தல்,  சென்ஞ்சர்  மூலம்  மீன்  இருக்கும்  இடம் கண்டு  பிடித்தல்  என  முன்னேற்றம்  காணும்  போது  நாங்கள்  மட்டும்  குண்டான்  சட்டிக்குள்  இன்னும்  மீனைத்  தேடுகின்றோம்.

போக்குவரத்து  வசதி  நல்ல  நிலை  பயங்கரவாதப் பிரச்சனைகள்  இல்லை  நேவிப் பிரச்சனைகள்  கொரிய சிங்களவர்களின்  பிரச்சனைகளை  அரச மட்டங்களில்  பேசித்தீர்க்களாம்  அதுக்கு  முதலில்  உங்கள்  சங்கங்களை  வலுப்பட  இயங்க வைக்கவேண்டும்  நிவாரன  உதவி  கோரும்  சங்கங்களால்  எந்தப்  பலனுமில்லை,  இந்தச் சங்கங்கள்  இன்னும்  7 கி, மீ.  எல்லையில்தான்  நிற்க்கின்றனே  அதுக்கு  மாற்று  வழி  என்ன  என  சிந்திக்கின்றது  இல்லை. அதனால்   பிரச்சனை  கிண்ணியா  மீனவனுக்கு  மட்டுந்தான்  ஏனைய  பகுதி  மீன் பிடி  ஓடிக் கொண்டுதான் இருக்கின்றது.

ஆகவே  மாற்று  வழிகளை  ஏனைய  ஊர்களிலுள்ள  சங்கங்களின்  அறிவுரைகளைக்  கேட்டு  நாமும்  நம்மைப் பலப்  படுத்துவோம்  என்றால்  வெற்றி  நிச்சயம்.இனியாவது  எமது  எம், பி, களைத் தொடர்பு கொள்வதை  விட  சிறந்த  வழி  ஏனைய  ஊர்  சங்கங்களுடன்  தொடர்புகளை  ஏற்படுத்துங்கள். முக்கியமாக  சல்லி , சாம்பள்தீவு , மூன்றாம் கட்டை ,  10ம் நெம்பர் , பத்தாம் கட்டை மற்றும்  மனையாவெளி  தமிழ்  மீனவர்கள்  சங்கங்களும்  அதே போல்  சீனக்குட,  திருகோணமலை  சிங்கள  மீனவர்கள்  சங்கங்களுடன் நல்ல  உறவுகளை  வைத்துக் கொண்டால்  பிரச்சனை  தீரவும்  வழியுண்டு.
     நன்றி,
              ஐனுதீன், கிண்ணியா.ஸ

Comments