நீதிமன்ற தடையை மீறி திட்டமிட்டபடி இன்று ஆர்ப்பாட்டம் நடாத்தப்படும் – நாமல் ராஜபக்ஷ


மாகம்புர துறைமுகம் மற்றும் மத்தளை விமான நிலையம் ஆகியவற்றை வௌிநாடுகளுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டப் பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் இது சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் டீ.வி. சானக அகியோருக்கு இந்த தடை உத்தரவை பிறப்பித்திருந்தார்.
எவ்வாறாயினும் ஏற்கனவே திட்டமிட்டிருந்த படி இன்றைய தினம் காலை தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments