போக்குவரத்து பஸ் சேவையினை ஏற்படுத்தி தருமாறு மக்கள் கோரிக்கை
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்திலிருந்து கல்முனை ,அக்கரைப்பற்றுக்கான இலங்கை போக்குவரத்து பஸ் சேவையொன்றினை ஆரம்பிக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கந்தளாயில் இருந்து தென்கிழக்கு பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள்,கந்தளாயில் இருந்து அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்குச் செல்வோர் ,கந்தளாயில் இருந்து தொழில் நிமித்தமாக கல்முனை,அக்கரைப்பற்றுக்குச் செல்வோர் என பலரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
கந்தளாயில் இருந்து கல்முனைக்கான குளிரூட்டி பஸ் சேவையொன்று அதிகாலை 5.30மணியிலிருந்து செல்கின்ற போதிலும் பாமர மக்கள் கூடுதலான பணத்தினை செலவிட்டு செல்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக முறையிடுகின்றனர்.
திருகோணமலை கிண்ணியா,கல்முனை வீதிகள் ஏற்படுத்துவதற்கு முன்னர் அனைத்து பஸ்களும் கந்தளாய் கூடாகவே சென்றது தற்போது கந்தளாயில் இருந்து ஒரு கூட இல்லாமல் இருப்பதாகவும் பிரதேச மக்கள் முறையிடுகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளிலிருந்து அரை மணித்தியாலயத்திற்கு ஒரு பஸ் சேவை இருக்கின்ற போது ஏன் கந்தளாயில் இருந்து இலங்கை போக்குவரத்து பஸ் சேவையொன்றினை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றது எனவும் மக்கள் கேட்கின்றனர்.
எனவே இவ்விடயத்தில் இலங்கை போக்குவரத்து பஸ் சேவையின் கிழக்கு பிராந்திய அதிகாரிகள், முகாமையாளர்கள் கவனத்தில் எடுத்து கூடிய விரைவில் கந்தளாய் மக்களின் போக்குவத்து பிரச்சினை சீர்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.


Comments
Post a Comment