பொது பல சேனாவுடன் முஸ்லிம் தரப்பு பேச்சு
சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பு
வழக்குகள் பற்றி ஆராயப்படவில்லை
ஏ.ஆர்.ஏ.பரீல்
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் முஸ்லிம் சிவில் தலைமைகளுக்குமிடையில் இதுவரை இரு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகவும் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவிக்கின்றன.
இப் பேச்சுவார்த்தையானது முஸ்லிம்கள் தொடர்பாகவும் இஸ்லாம் தொடர்பாகவும் பொது பல சேனா அமைப்பு கொண்டுள்ள சந்தேகங்களை நிவர்த்திக்கும் நோக்கிலேயே இடம்பெறுவதாகவும் முஸ்லிம்களால் ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்றும் இப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள தரப்பினர் 'விடிவெள்ளி'யிடம் உறுதிப்படுத்தினர்.
குறித்த பேச்சுவார்த்தைகளில் தாம் பங்குபற்றியதை பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகேயும் உறுதிப்படுத்தினர். அதேபோன்று இவ்வாறானதொரு பேச்சுவார்த்தையில் தமது பிரதிநிதிகள் பங்குபற்றியதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகிய அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
இப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இது தொடர்பில் விடிவெள்ளிக்கு விளக்கமளிக்கையில், பேச்சுவார்த்தைகள் நீதிமன்றங்களில் ஞானசாரதேரருக்கு எதிராக முஸ்லிம்களால் தொடரப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்வது தொடர்பில் நடைபெறவில்லை. சமூக வலைத்தளங்கள், ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றன.
பேச்சுவார்த்தைகள் பொதுபலசேனா அமைப்பு இஸ்லாத்தின் மீதும் குர்ஆன், ஹதீஸ் மீதும் கொண்டுள்ள தவறான கருத்துக்கள் மற்றும் சந்தேகங்களை நீக்குவதற்காகவே நடாத்தப்பட்டன. ‘அல் தக்கியா’ பற்றி ஞானசார தேரருக்கு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதியால் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
நாம் ஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்வது பற்றிப் பேசவில்லை. அளுத்கம சம்பவத்தில் முஸ்லிம்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். நாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பள்ளிவாசல் தாக்குதல்கள் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும்.
ஞானசார தேரரின் பின்னணியிலேயே சிங்ஹலே போன்ற இனவாத அமைப்புகள் உருவாகின. வழக்குகளை வாபஸ் பெற்று ஞானசார தேரரை பாதுகாக்க முயற்சிப்பதென்றால் அது முஸ்லிம் சமூகத்துக்குச் செய்யும் துரோகமாகும்.
நானும் மேலும் பலரும் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். நான் வழக்கினை வாபஸ் பெற்றுக்கொள்ளமாட்டேன். முஸ்லிம்கள் எவரும் வாபஸ் பெற்றுக்கொள்ளமாட்டார்கள். நாம் நடத்திய பேச்சுவார்த்தைகளை திரிபுபடுத்தி ஒருசில மஹிந்த ராஜபக் ஷ ஆதரவு முஸ்லிம்கள் அரசியலில் சுயலாபம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஏனைய முஸ்லிம்கள் எமது பேச்சுவார்த்தைகளை ஆதரிக்கின்றனர். எமது பேச்சுவார்த்தைகளை எதிர்ப்பவர்கள் முஸ்லிம் சமூகத்தை குழப்ப முயற்சிக்கின்றனர்.
குர்ஆன் மற்றும் ஹதீஸில் ஞானசார தேரருக்கு மயக்கமான விடயங்களில் தெளிவுகளை வழங்கி இருக்கிறோம். அந்தத் தெளிவுகளை அவர் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு குர்ஆன், ஹதீஸ், அல்லாஹ், நபிகள் நாயகம் (ஸல்) பற்றி பேச வேண்டாம், விமர்சிக்க வேண்டாம் என்று ஞானசார தேரரை கோரியிருக்கிறோம்.
நாங்கள் ஞானசார தேரருடன் இரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதாகவும் அவருக்கு எதிராக எம்மால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ளப் போவதாகவும் தவறான, பொய்யான கருத்துக்கள் பரப்பப்படுவதை நாம் கண்டிக்கிறோம்.
நான் ஒருபோதும் ஞானசார தேரரை பாதுகாக்க முயற்சிக்கவில்லை. ஞானசார தேரருடனான பேச்சுவார்த்தையில் என்னுடன் முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம்.அமீன், உப தலைவர் ஹில்மி அஹமட், இஸ்லாமிய பிரசாரகர் தஹ்லான் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதியாக மௌலவி பாஸில்பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர் என்றார்.
பொதுபல சேனா
நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசாரதேரர் மற்றும் நிறேவேற்று பணிப்பாளர் கலாநிதி டிலன்த விதானகே ஆகியோரிடம் விளக்கம் கோரியபோது பேச்சுவார்த்தைகள் தொடர்பான விபரங்களை முஸ்லிம் தரப்பினரிடமே கேட்டறிந்து கொள்ளுமாறு ‘விடிவெள்ளி’க்கு தெரிவித்தனர்.
ஜம்இய்யதுல் உலமா
இதேவேளை இச் சந்திப்புகள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சமூக வலைத்தளங்களில் 'வழக்குகளை வாபஸ் பெற்று ஞானசார தேரரை காப்பாற்ற முயற்சி' என்ற செய்தி பரவி வருகின்றது. இதில் ஞானசார தேரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குமாறு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி, சட்டத்தரணி சிராஸ் நூர்தீனிடம் வேண்டியதாக கூறப்பட்டுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும். உண்மைக்கு புறம்பான இவ்வாறான செய்திகளை எழுதுகின்றவர்களும் பரப்புபவர்களும் அல்லாஹ்வை பயந்து கொள்ளவேண்டும்.
மேற்படி விடயம் சம்பந்தமாக பின்வரும் விடயத்தை அகில இகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவருக்கும் அறியத்தர விரும்புகின்றது.
இலங்கையில் சகவாழ்வை கட்டியெழுப்ப அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எடுத்துள்ள முயற்சிகள் நாம் அறிந்ததே. இதில் 2012 ஆம் ஆண்டு ஜம்இய்யா வெளியிட்ட சகவாழ்வு பிரகடனம் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த வகையில் இஸ்லாம் பற்றிய தெளிவு பிற மதத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயங்கள் களையப்பட வேண்டும், சத்தியம் அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜம்இய்யா செயற்படுகின்றது. அதற்கான முயற்சிகளாகவே ஜம்இய்யாவின் சமாஜ சங்வாத புத்தக வெளியீடும் பிற மதத் தலைவர்களுடனான சந்திப்புகளும் காணப்படுகின்றன.
ஞானசார தேரரோடு பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்று ஜம்இய்யாவோ ஜம்இய்யாவின் தலைவரோ யாரிடமும் கேட்டுக் கொள்ளவில்லை. மாறாக சிலர் குறித்த தேரர் இஸ்லாம் பற்றிய சில சந்தேகங்கள் பற்றி கலந்துரையாடி முஸ்லிம்களுடனான தனது பிரச்சினைக்கு தீர்வுகாண விரும்புவதாகவும் அதற்காக அவருடன் சந்திப்பொன்று நடாத்தப்பட இருப்பதாகவும் கூறி அதில் உலமாக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் ஜம்இய்யாவிடம் வேண்டிக்கொண்டனர்.
இதன்போது குறித்த இவ்விடயத்தில் அனுபவமுள்ள சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அவர்களையும் பிறிதொரு சட்டத்தரணியையும் ஜம்இய்யாவின் தலைவர் தொடர்பு கொண்டு இவ்விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளலாம் என ஆலோசனை பெற்றார். அதன்போது சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் குறித்த தேரரை சந்திப்பதில் பிரச்சினையில்லை என்றும் தான் இச்சந்திப்பில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் ஞானசார தேரருடனான வழக்குகள் விடயத்தில் அவர் நீதிமன்றத்திலே தனது பிழையை ஏற்றுக் கொண்டு இனிமேல் இதில் ஈடுபட மாட்டேன் என உறுதியளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பின்னர் குறித்த சந்திப்பில் கலந்துகொள்ள அஷ்-ஷெய்க் பாஸில் பாரூக் அனுப்பப்பட்டார்.
அடுத்தநாள் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட அஷ்ஷெய்க் பாஸில் பாரூக், குறித்த தேரர் மீதான வழக்குகள் பற்றி அங்கு கலந்துரையாடவில்லை என்பதாகவும் மாறாக அவரிடம் காணப்பட்ட இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயங்களுக்கு பதில் வழங்கும் வகையிலேயே சந்திப்பு நடைபெற்றதாகவும் உறுதிப்படுத்தினார்.
இவ்விடயம் ஜம்இய்யாவின் கடந்த நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போது, குறித்த தேரர் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தான் முன்வைத்த கருத்துகளுக்கு மன்னிப்புக் கேட்டு, உண்மையில் இஸ்லாம் பற்றிய அவரது தப்பபிப்பிராயங்களுக்கு தெளிவு பெற விரும்பினால் அவருடன் உரையாடலை தொடரலாம் என்றும் அவருக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தமாக குறித்த சட்டத்தரணிகளே முடிவெடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
எனவே, சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானதாகும். பிழையான தகவல்களைப் பரப்பி மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துவதை தவிர்ந்து கொள்ளுமாறு சகலரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் கவுன்சில்
பொதுபலசேனா அமைப்புடன் பேசுவதற்கு தமக்கு கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொண்டதாகவும் முஸ்லிம்கள் தொடர்பான அவர்களது சந்தேகங்களை நிவர்த்திக்கவும் சமகாலப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடவும் முடிந்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரதேரருக்கும் முஸ்லிம் தரப்புக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மீது முஸ்லிம் தரப்பினரால் தொடரப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு பேச்சுவார்த்தையின்போது கேட்கப்படவில்லை. அவ்வாறு நாம் கூறவுமில்லை
நிபந்தனைகள் எதுவுமில்லாமலே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இஸ்லாம் மார்க்கம் மற்றும் குர்ஆன், ஹதீஸ் பற்றி ஞானசார தேரர் கொண்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி கொள்ளும் வகையில் தெளிவுகளை வழங்கினோம். சந்தேகங்களைத் தீர்த்து வைத்தோம்.
முஸ்லிம் சமூகம் சமகாலத்தில் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள், தொல்பொருட்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் சவால்கள் பற்றியும் கலந்துரையாடினோம்.
எந்தச் சந்தர்ப்பதிலும் ஞானசாரதேரர் மீதான வழக்குகள் தொடர்பில் பேசப்படவில்லை. இரண்டு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளோம். 3 ஆம் கட்டப் பேச்சுவார்த்தையையும் விரைவில் நடாத்தவுள்ளோம்.
சமூகவலைத்தளங்கள் எமது பேச்சுவார்த்தையை திரிபுபடுத்தி தவறான,பொய்யான செய்திகளைப் பரப்பி வருகின்றன என்றார்.
ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன்
இதேவேளை முஸ்லிம்களால் ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள எந்தவொரு வழக்கும் வாபஸ் பெறப்படவில்லை என்றும் எதிர்காலத்தில் வாபஸ் பெறப்படமாட்டாது எனவும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை ஒருபோதும் வாபஸ் வாங்கப் போவதில்லை.
ஞானசார தேரருடன் தொடர்புடைய வழக்குகளை சட்டமா அதிபரே கையாள்கிறார். முஸ்லிம் சமூகத்தின் நலன்களின் மீது அக்கறை கொண்ட ஒரு சட்டத்தரணியே நான். சட்டத்தரணி என்ற வகையில் என்னால்கூட ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்க முடியாது.
முஸ்லிம் சமூகம் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த நம்பிக்கையை காற்றில் பறக்கவிடும்படியாகவோ அல்லது முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுக்கும் படியாகவோ எனது செயற்பாடுகள் ஒருபோதும் அமையாது.
மேலும் இங்கு சகலரும் அறியவேண்டிய ஒருவிடயம் உள்ளது. அதாவது ஞானசாரருக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பிலிருந்து, முஸ்லிம் சட்டத்தரணிகளாகிய Aநாம் தொடுத்த இந்த வழக்குகளினாலேயே, ஞானசாரர் ஓரளவுக்கேனும் அமைதியாகவுள்ளார். இந்த வழக்குகளை நாம் தொடுத்திராவிட்டால், ஞானசாரரின் ஆட்டம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
அத்துடன் ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்கிவிட்டால், அவர் திருந்தி விடுவதற்கான எத்தகைய உத்தரவாதங்களும் நம்மிடம் இல்லை. இந்த நிலையில் ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குவது எந்தவகையில் நியாயம்?
எனவே ஞானசாரருக்கு எதிராக, நாம் தொடுத்த வழக்குகளை வாபஸ் வாங்கமாட்டோம் என்பதை முழு முஸ்லிம் சமூகத்திற்கும் மிகுந்த பொறுப்புடனும், திட்டவட்டமாகவும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

Comments
Post a Comment