அதிக வரு.வாய் என ஈட்டும் தமன்கடுவை பிரதேச சபை ஏன் இன்னும் நகரசபையாக மாற்றப்படவில்லை

Ariff S Naleem

சகோதரர் Paris noor அவர்களின் கேள்விக்கு பதில். வரலாற்று சிறப்பு மிக்க பொலன்னறுவை மாவட்டத்தில் அரச நிறுவனங்களில் இரண்டு பல ஆண்டுகாலமாக முதன்மை வகித்துவருகின்றமையினை நாம் அறிவோம். அதில் ஒன்று CTB இலங்கை போக்குவரத்து சேவை. அடுத்தது தமன்கடுவை பிரதேச சபை. மிக முக்கிய பிரதேசங்களை தன்னகத்தே கொண்டுள்ள தமன்கடுவை பிரதேச சபை ஏன் நகரசபையாக மாற்றம் காணவில்லை மாற்றப்படவில்லை எனும் கேள்வி அன்மைக்காலங்களாக பரவலாக நம்மிடையே எழ ஆரம்பித்திருக்கிறது.

இந்த கேள்வி நியாயமானது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக இருக்கின்ற காலத்தில் இது பற்றி ஆலோசிக்கப்பட்ட வேளை குறிப்பாக தமன்கடுவை பிரதேச சபை நகரசபையாக மாற்றமடையுமிடத்து பிரதேச மக்களுக்கு எத்தகைய சாதக பாதகங்களை ஏற்படுத்தும் எனவும் அங்கே ஆராயப்பட்டது. 



முடிவில் கதுருவெலை நகரத்தை இன்னும் அபிவிருத்தியடைய செய்து விட்டு மக்களின் வாழ்வாதார,சுகாதார,போக்குவரத்து,சுற்றுலா துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்ட பின் நகரசபையாக மாற்றுவதாக தீர்மானிக்கப்பட்டது.

கடந்த பிரதேச சபை தேர்தலில் உபாலி என்பவரின் காரியாலயத்தை திறக்கவென கதுருவெலை சோமியல் சந்திக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி(அப்போது அமைச்சர்) தமன்கடுவை பிரதேச சபை தலைவராக இரண்டு முறை பதவி வகித்த தனது தோழர் மர்ஹூம் இஸ்மாயில் அவர்களை ஜாபகப்படுத்தி பேசினார்.பின்னர் தமன்கடுவை பிரதேச சபையினை நகரசபையாக தரம் உயர்த்த தான் எண்ணங்கொண்டுள்ளதாகவும் இதனால் கதுருவெலை நகர வியாபாரிகளின் வரிச்சுமை அதிகரிக்கும் எனவும் இன்னும் நகரை அபிவிருத்தி அடையச் செய்து விட்டு இது பற்றி சிந்திக்கலாம் எனவும் சொல்லியிருந்தார்.

தற்போது கதுருவெலை நகரத்தை மையப்படுத்தி பாரிய அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றமையினை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக வீதி,குடிநீர்,கல்வி,சுகாதாரம் என்பனவே அவை. இதற்க்கிடையே கதுருவெலை நகரில் வர்தக மத்திய நிலையமொன்றும் அமைக்கப்பட்டு வருகின்றது.இதன்காரணமாக கதுருவெலை டவுன் இரண்டாக உடைப்பெடுக்கவும் வாய்பிருப்பதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

தற்போது அமைக்கப்பட்டு வரும் கதுருவெலை வியாபார மத்திய நிலையத்தில் முதல் கடை முஸ்லிம் ஒருவருக்கே வழங்கப்படவுள்ளதாக சிலர் பேசிக்கொள்கின்றனர்.அதன் உண்மை நிலை பற்றி நமக்கு தெரியாது.

எது எப்படி இருப்பினும் அதிக வருமானத்தை ஈட்டும் தமன்கடுவை பிரதேச சபை ஏன் இன்னும் நகர சபையாக தரமுயர்த்தப்படவில்லை எனும் தற்போதைய எமது கேள்விக்கு மிக விரைவில் விடை கிடைக்கும் என நம்பப்படுகிறது. -நாம் எந்தக்கட்சியையும் எந்த அரசியல் வாதியையும் சார்ந்தவர் அல்ல. சாகோதரர் Paris Noor அவர்களின் கேள்விக்கான பதிலே இது.

Comments