கண்ணால் பார்த்து காதல் கேட்ட ஒரு உண்மை சம்பவம்


கண்ணால் பார்த்து காதல் கேட்ட ஒரு உண்மை
சம்பவம் 
ஒன்றை நீண்ட நாளாக பதிவிட நினைத்திருந்தேன் அது இன்று கிடைத்து அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹுக்கே.

ஒரு ஏழை தம்பதியினருக்கு பிறந்த ஆன் குழந்தை ஒன்றை பிறந்தே இரண்டு மாதத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு சாதாரண நடுத்தர வசதி படைத்த தம்பதியினர் வாங்கிக் கொண்டனர். 

வறுமையின் உச்சகட்டம் அன்று தாய்க்கு பிள்ளை பாசம் மறக்கடிக்க செய்து மீதமுள்ள பிள்ளைகளின் நிலமையை கருத்தில் கொண்டும் அந்த ஏழை பெற்றார்கள் தூக்கி கொடுத்து விட்டார்கள். அந்த குழந்தையை தத்தெடுத்தவர்கள் நன்றாக படிக்க வைத்து நல்ல சூழலில் வளர்த்து இப்போது அவர் திருமணம் செய்யும் வயதையும் அடைந்து விட்டார்.

நல்லதுதானே இதில் என்ன தவறு' சந்தோசம்தானே என்று நினைப்பீர்கள் சந்தோசம்தான் அனால் இதில் சங்கடம் ஒன்று மனதை கிள்ளுகிறது அதை பற்றித்தான் நான் இங்கு உங்களிடம் சொல்ல விரும்புகிறேன.

இரண்டு மாத குழந்தை பருவத்தில் இருந்து திருமண வயதுவரை அந்த இடைப்பட்ட கால எல்லைக்குள் தனது பெற்ற தாயையும் சகோதர்களையும் சந்தித்தது கிடையாது இது வளர்ப்பு பெற்றோர்களின் விடாமுயற்சி வழிகாட்டலின் ஒன்று.

பெற்ற தாய் சகோதர்களை மறைத்து அவர்களை காட்டாமல் ஒழித்து வைத்து' வளர்ப்பு பெற்றார்கள்' நான்தான் வாப்பா நான்தான் உம்மா என்று சொல்லிக் கொடுத்து இதுவரை வளர்த்து விட்டனர்

 நண்பர்களுடன் உறவினர் வீடொன்றுக்கு வந்திருந்த அந்த வளர்ப்பு மகனுக்கு தெரியாது அதே ஊரில்தான் தனது சகோதரர் ஒருவர் இருக்கின்றார் 
என்று அதே போன்று அவரை பெற்ற தாயும் அவர் வசிக்கும் அதே மாவட்டத்தில்தான் வசிக்கிறார் என்று. வளர்ப்புப் பிள்ளைகளைத் தம்பிள்ளைகளாக நடாத்தி வந்த வேளையில் தான் இறைவன் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை இறக்கி பழைய நடைமுறைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தான். அல்லாஹ் கூறுகின்றான்.

'' உங்களின் சுவீகாரப் பிள்ளைகளை உங்கள் (சொந்த) பிள்ளைகளாக்கிவிடவில்லை. இவையாவும் உங்கள் வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும். அல்லாஹ் உண்மையைக் கூறுகிறான். இன்னும் அவன் நேர் வழியையே காட்டுகிறான்''. (33ம் அத்தியாயம் 4ம் வசனம்) எனவே இதற்கான யதார்த்தங்களும் நியாயங்கயும் என்னவென நோக்கினால் இங்கு அப்பிள்ளையின் உண்மையான பெற்றோர் மறைக்கப்பட்டு பொய்யானதொரு தகவலைக் கொண்டு அப்பிள்ளை ஏமாற்றப்படுகிறது.

மேலும் அப்பிள்ளையை நாம் வளர்க்கும் விடயம் அக்குழந்தைக்கு தெரியா விட்டாலும் சமுதாயம் அதை அறிந்திருக்கின்றது. என்றோ ஒருநாள் அப்பிள்ளைக்கு உண்மை தெரிய வரும் போது அப்பிள்ளை மனோரீதியாக பாரிய அளவில் பாதிக்கப்படும். எவ்வளவுதான் வளர்த்தாலும் பெற்றவளே தாய் கூடப் பிறந்தவர்களே சகோதர்கள் தயவு செய்து நீங்கள் தத்தெடுத்த பிள்ளைகளுக்கு உண்மையான பெற்றவர்களை காட்டி கொடுங்கள் மறைக்க வேண்டாம் அது மிக பாவமான துரோகமான செயல்.

மன்னிக்கவும் யாரையும் புன்படுத்தும் நோக்கமல்ல. ஒரு பெற்ற தாயின் கண்ணீரும் கூடப்பிறந்த சகோதரர் ஒருவரின் வலியும்மே என்னை எழுத வைத்தது.

நன்றி. அன்வர் சிஹான்

Comments