மியன்மாரில் கொல்லப்படும் இந்துக்கள்! முஸ்லிம்களுடன் வெளியேறும் பரிதாபம்


மியன்மாரில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது, இந்துக்களும் தாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். இதனால் முஸ்லிம் மக்களுடன் இணைந்து இந்து மக்களும் அடைக்கலம் தேடி வங்கதேசம் செல்கின்றனர்.

இதன்படி, மியன்மாரில் இருந்து சுமார் 160 ரோஹிங்யா இந்துக் குடும்பங்கள் வெளியேறி வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள குதுப்லோங் பகுதிக்கு அண்மையில் சென்றடைந்துள்ளார்கள்.

மியன்மாரின் ரகைன் பிராந்தியத்தில் முஸ்லிம்கள் மட்டுமல்ல இந்துக்களும் வசிக்கின்றனர்.

ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஏறக்குறைய நான்கரை இலட்சம் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுடன் இந்துக்களும் மியான்மரை விட்டு வெளியேறி உள்ளார்கள்.

ரகைன் பிராந்தியத்தில் வசிக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களைப் போன்றே, சிறுபான்மை இந்துக்களுக்கும் குடியுரிமை இல்லை.

அந்த வகையில், மத ரீதியிலான வன்முறையால் பாதிக்கப்பட்டு மியன்மாரில் இருந்து வெளியேறி வங்கதேசத்திற்கு சென்றுள்ளதாக பெரும்பான்மையான இந்துக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மியன்மாரில் இருந்து வெளியேறி வங்கதேசத்திற்கு வந்து சேர இந்து அகதிகளுக்கு சில நாட்கள் தேவைப்பட்டுள்ளன.

தங்கள் சொந்த நாட்டையும், உறவினர்களையும், இருப்பிடங்களையும் இழந்து, அகதிகளாகி உள்ளனர்.

தற்போது, தமக்கு சொந்தமில்லாத நாட்டில் அன்னிய மனிதர்களின் ஆதரவு இவர்களுக்கு கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments