பிரதியமைச்சர் ஒருவரின் இணைப்பாளரின் வாகனம் மோதியதில் தாயும், மகனும் படுகாயம்


மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாற்றில் பிரதியமைச்சர் ஒருவரின் இணைப்பாளரின் வாகனம் மோதியதில் தாயும், மகனும் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பிரதியமைச்சர் ஒருவரின் இணைப்பாளர் சென்ற வாகனம் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மீது மோதியுள்ளது.


இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஓந்தாச்சிமடத்தினை சேர்ந்த 35வயதுடைய பெண்ணும், அவரது ஐந்து வயது மகனும் படுகாயமடைந்த நிலையில் பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றது.

இதேவேளை, விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Comments