ஜனாதிபதி நாளை கட்டார் விஜயம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (24) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கட்டார் செல்லவுள்ளார்.

இதன் போது ஜனாதிபதி, கட்டார் நாட்டின் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதுடன், அங்குள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.

இவ்விஜயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இன்னும் சில அமைச்சர்களும் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, கட்டார் நாட்டிலுள்ள இலங்கையர்களை அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திக்கவுள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி மு.ப. 09 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இச்சந்திப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments