புலம்பெயர் யாழ் முஸ்லிம்கள்; யாழ் முஸ்லிம்களின் குரலாக இருத்தல் அவசியமாகும். அ.அஸ்மின் தெரிவிப்பு
n.m. abdullah
Jaffna Muslim Community- International அமைப்பினரால் யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் அதன் தலைவர் ஜனாப் அனீஸ் றவுப் தலைமையில் 07-10-2017 அன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கிய சந்தர்ப்பத்திலேயே வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார், அவர் அங்கு முன்வைத்த கருத்துக்களின் சுருக்கம் வருமாறு.
யாழ்ப்பாண முஸ்லிம்களிடம் பல்வேறு சமூக அமைப்புகள் இயங்குகின்றன, அவற்றை இயங்க வேண்டாம் என்று தடுக்க முடியாது, அவ்வாறான அமைப்புகள் உருவாகுவதையும் நாம் தடுக்க முடியாது, அது எமது சமூகத்தின் இயல்பாகிவிட்டது; 1990 களுக்கு முன்னரும் அவ்வாறு பல்வேறு அமைப்புகள் இயங்கின, 2010 மீள்குடியேற்றத்தின் பின்னரும் இயங்குகின்றன. எனவே இவற்றை அங்கீகரிக்கின்ற மனோநிலை எமக்கு அவசியமாகும். யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியிலும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை மையப்படுத்திய அமைப்புகள் இயங்குகின்றன. தற்போது புலம்பெயர் தேசங்களிலும் இத்தகைய அமைப்புகள் உருவாகியிருக்கின்றன. இதனை நாம் வரவேற்க வேண்டும், ஒருவரை ஒருவர் விமர்சிப்பதும், எதிராக கருத்துக்களை முன்வைப்பதும் ஆரோக்கியமானதல்ல. அந்தவகையில் யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பு – ஐக்கிய இராச்சியம் அமைப்பினையும் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் என்னும் அமைப்பையும் நாம் அங்கீகரிக்கின்றோம், வரவேற்கின்றோம் அவற்றின் செயற்பாடுகள் எமக்கும் எமது சமூகத்திற்கும் தேவையானவை என்பதே எமது நிலைப்பாடாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இங்கே உருவாகும் அமைப்புகள் “தாமே எல்லாம்” என்கின்ற ஒருவித உயர்வுச்சிக்கலுக்குள் அகப்பட்டு விடுகின்றார்கள்; முழு யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தையும் குத்தகைக்கு எடுத்துவிட்டோம், இனி எவருமே செயற்படக்கூடாது, நாமே எல்லாவற்றையும் செய்து முடிப்போம் என்கின்ற ஒருவித மனோநிலை அவர்களுக்கு ஏற்பட்டு விடுகின்றது, இது தவறானதாகும். நாம் எல்லா அமைப்புகளையும் வரவேற்கின்றோம், அவர்களின் செயற்பாடுகளையும் வரவேற்கின்றோம், ஆனால் அவை ஒரு பொது இலக்கு நோக்கியதாக இருக்கவேண்டும் என்பது மாத்திரமே எமது நிலைப்பாடும் வேண்டுகோலுமாகும்.
அதேபோன்று புலம்பெயர் தேசங்களில் இருக்கின்றவர்கள் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கவேண்டும் என்பது எமது அடிப்படையான எதிர்பார்ப்பு அல்ல, அது தேவையற்றது. ஆனால் உங்களிடமிருந்து நாம் பிரதானமாக இரண்டு விடயங்களையே எதிர்பார்க்கின்றோம்.
முதலாவது புலம்பெயர் தேசங்களில் நீங்கள் உங்கள் வாழ்வை சிறப்பானதாக அமைத்துக்கொள்ளுங்கள், சமூகரீதியாக பொருளாதார ரீதியாக, கல்வி ரீதியாக நீங்கள் வளமான மக்களாக இருத்தல் மிக மிக அவசியமானதாகும். உங்களது குழந்தைகளுக்கு இஸ்லாமிய உணர்வுகளையும், சமூக உணர்வினையும், சிறப்பான கல்வியையும், தொழில்வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுங்கள்
அடுத்து யாழ் முஸ்லிம் சமூகத்தின் சர்வதேசக் குரலாக நீங்கள் இருக்க வேண்டும், யாழ் முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களை புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற இலங்கை மக்களோடு, இலங்கை இராஜதந்திரிகளோடு, வெளிநாட்டு இராஜதந்திரிகளோடு, அங்கிருக்கும் அரசியல் தலைவர்களோடு, ஊடகங்களோடு கலந்தாலோசிக்கின்றவர்களாக நீங்கள் இருத்தல் அவசியமாகும்.
இதுவே எமது யாழ் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது; அதை விடுத்து யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கு ஸ்காத் வழங்குகின்றவர்களாக, ஸதாக வழங்குகின்றவர்களாக, இப்தார், குர்பானி பித்ரா வழங்குகின்றவர்களாக நாம் உங்களை நோக்கவில்லை; அவற்றை தனிப்பட்ட ரீதியில் உங்களது உறவுகள், உங்களது நண்பர்கள், உங்களுடைய தொடர்புகளினூடாக வழங்கிவையுங்கள், அதனை அமைப்பு ரீதியாக முன்னெடுக்காதீர்கள் ஏனெனில் உங்களது பிரதான பணி யாழ் முஸ்லிம் சமூகத்தின் சர்வதேசக் குரலாக ஒலிப்பதேயாகும்.
இவ்வாறான சந்திப்புகள் ஆரோக்கியமானவை இவற்றை நாம் வரவேற்க வேண்டும் என்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
தகவல் எம்.எல்.லாபிர்

Comments
Post a Comment