பொதுபல சேனா விரைவில் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கும் – ஞானசார தேரர்


இலங்கை சிங்களவர்களின் நாடாகும் எனவும் இந்த நாட்டை சிங்களவர்கள் மாத்திரமே ஆட்சி செய்ய முடியும் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களுக்கு சார்பான அரசியலமைப்பையே கொண்டு வரவேண்டும் எனவும் இதன்படி தற்போது அரசாங்கத்தினால் கொண்டுவரத்திட்டமிடப்பட்ட புதிய அரசமைப்பை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன எனவும் ஆனால் இதனை தம்மால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமுடியாது எனவும் தெரிவித்துள்ள அவர் இதற்காக குறுகிய காலத்தில் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மை தலைவர்களிற்கு தற்போது உள்ள அரசமைப்பில் காணப்படும் குறைகள் என்னவென கேள்வி எழுப்பியுள்ள அவர் சிறுபான்மை அரசியல் தலைவர்களை சந்தித்து இது தொடர்பில் கேள்வி எழுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments