மகா சங்கத்தினரைப் பிரித்தாவது ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது மஹிந்த குழு- சஜித்


மகா சங்கத்தினருக்கிடையில் பேதங்களை உருவாக்கியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என கூட்டு எதிர்க் கட்சி முயற்சிக்கின்றது என அமைச்சர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
திஸ்ஸமஹாராம, நெதிகம்விலவில் இன்று (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
மக்களின் வாழும் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டையில் தோல்வியடைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததே அல்லாமல், அப்பிரதேசங்களிலுள்ள மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முன்வரவில்லையெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Comments