முஸ்லிம் தலைமைகளுடன் உலமா சபை சந்திப்பு

யாப்பு, எல்லை நிர்ணயம் குறித்து ஆராய்வு

புதிய அர­சி­ய­ல­மைப்பில் வட கிழக்கில் வாழும் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் உட்­பட முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்கு எவ்­வா­றான தீர்­வுகள் வழங்­கப்­பட வேண்டும் மற்றும் முஸ்­லிம்­களின் உரி­மைகள் எவ்­வாறு பாது­காக்­கப்­பட வேண்டும் என்­பது தொடர்பில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் ஒற்­று­மைப்­பட்­டுள்­ளனர்.

முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வுகள், புதிய அர­சி­ய­ல­மைப்பில் முஸ்லிம் சமூகம் தொடர்­பாக உள்­ள­டக்­கப்­பட வேண்­டிய விட­யங்கள், முஸ்­லிம்­களின் உரி­மைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்­கை­யொன்­றினைத் தயா­ரிப்­ப­தற்­கென அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபை நிய­மித்­துள்ள உல­மாக்கள், புத்­தி­ஜீ­விகள் அடங்­கிய குழு கடந்த வாரம் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களை அழைத்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. குறித்த பேச்­சு­வார்த்­தை­யின்­போது புதிய அர­சியல் அமைப்பு, மாகாண எல்லை நிர்­ணயம் என்­பன தொடர்பில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் ஒரு­மித்து செயற்­ப­டு­வ­தென தீர்­மா­னித்­தனர். 

அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தலை­மையில் நடை­பெற்ற இப்­பேச்­சு­வார்த்­தையில் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, சுகா­தாரம், போசனை மற்றும் சுதேச மருத்­துவ பிர­தி­ய­மைச்சர் பைசல் காசிம், கிரா­மிய பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பிர­தி­ய­மைச்சர் அமீர் அலி, கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்­டனர்.

முஸ்­லிம்­களின் சம­கால பிரச்­சி­னைகள், புதிய அர­சி­ய­ல­மைப்பு மற்றும் மாகாண எல்லை நிர்­ணயம் என்னும் விட­யங்­களில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும் தனித்துச் செயற்­ப­டாது தனித் தனி­யாக தங்­க­ளது ஆலோ­ச­னை­க­ளையும் கருத்­து­க­ளையும் முன்­வைக்­காது ஒரு­மித்து செயற்­பட வேண்டும் என முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளிடம் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை வேண்­டுகோள் விடுத்­தது.

ஒவ்வோர் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும் தமது அர­சியல் கொள்­கை­களைப் புறந்­தள்ளி சமூகம் சார்ந்த விட­யங்­களில் ஒரு­மித்து ஒரே இலக்­குடன் செயற்­பட வேண்டும் எனவும் உலமா சபை முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­தது.

புதிய அர­சி­ய­ல­மைப்­பிலும் மாகாண எல்லை நிர்­ண­யத்­திலும் முஸ்லிம் சமூ­கத்­துக்கு பாத­க­மான விட­யங்கள் இடம்­பெற்று விடக் கூடாது என்­பதில் அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை மிகவும் விழிப்­புடன் இருப்­ப­தா­கவும் எடுத்­து­ரைக்­கப்­பட்­டது.

வில்­பத்து விவ­கா­ரத்­திலும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் அர­சியல் கட்­சி­களும் வேறு­பட்ட கொள்­கை­களைக் கொண்­டி­ருக்­காது ஒன்­று­பட வேண்­டு­மெ­னவும் உலமா சபை முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களை வேண்­டி­யது. குர்ஆன் ஹதீஸின் வழி­காட்­ட­லுக்­க­மைய சமூக நல­னுக்­காக ஒன்­றி­ணைய வேண்டும் பிரிந்து நிற்கக் கூடாது எனவும் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது.

உலமா சபையின் அறி­வு­ரை­க­ளையும் கருத்­து­க­ளையும் ஏக­ம­ன­தாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியின் தலை­மையில் விரைவில் ஒன்­று­கூடி இது தொடர்பில் கலந்துரையாடி தமது ஏகோபித்த கருத்துகளை முன்வைப்பதாக உறுதியளித்தார்கள்.

முஸ்லிம் அரசியல் தலைமைகளின் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கருத்துகளையும் பெற்று உலமா சபை அறிக்கையொன்றினைத் தயாரித்து அரசியலமைப்பு வழி நடத்தல் குழுவிடம் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments