பலான – மொட்டான குடிநீர் வழங்கல் திட்டம்
கண்டி மாவட்டம், பலான – மொட்டான குடிநீர் வழங்கல் திட்டம், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களால் நேற்று (07) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
4.5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், நீண்டநாள் குடிநீர் தேவையை எதிர்நோக்கிவந்த 450 குடும்பங்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, மத்திய மாகாணசபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார், மத்திய மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நயீமுல்லாஹ், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் செயலாற்றுப் பணிப்பாளர் மஹிலால் சில்வா, உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





Comments
Post a Comment