திருகோணமலை  மாவட்ட  பிரதேசவாதத்துக்கு  முக்கிய  காரணிகள் அன்றும்  இன்றும்

ஐனி,
கிண்ணியா,

11/09/2017.

இலங்கை  சுதந்திரம் அடைந்து  முதல்  தேர்தல்  1947ம்  ஆண்டு  நடைபெற்ற  போது   ஐ,தே, கட்சி, தமிழரசு  கட்சியும்  போட்டியிட்டு மூதூர்  தொகுதியில்  மர்ஹூம்  ஏ,ஆர்,எம்,ஏ, அபூபக்கர்  எம், பி, அவர்கள்  ஐ,தே,க  போட்டியிட்டு  3500  வாக்குகள்  பெற்று  பாராளும்  மன்றம்  நுழைந்தாா்கள். இரண்டாவதாக  நடைபெற்ற  தேர்தலில்  எம்,ஈ,எச், அலி எம்,பி,  அவர்கள்  தமிழரசு கட்சியில்  போட்டியிட்டு  வெற்றி பெறக்  காரணம்  சின்ன  ஒரு  பொய்யான  வார்த்தைதான், அதாவது அபூபக்கர் " கிண்ணியாக்காரனை  மாடு"  என்று  சொன்னான். அன்றிலிருந்து  இன்று  வரைக்கும்  நாங்கள்  தலைவன்  எதைச் சொன்னாலும்  வேதவாக்காக  நம்பி  நம்பி  மிகவும்  மோசமான  அரசியல்  பின்னடைவுகளைச்  சந்தித்துக்  கொண்டிருக்கின்றோம்.   சுயமாக  சிந்திக்கும்  எண்ணத்தை  அரசியலில்  மறந்துவிடுகின்றோம். அதே  நேரம்  அன்று  தோன்ற  வேண்டிய  மூதூர்  தொகுதியின்  பிரதேசவாதம்  கட்சிகள்  பெரசாக  இல்லாத  காரணத்தினாலும்  மக்கள்  தொகை  குறைவானதின்  காரணத்தாலும்  பின்னாடி  வந்த இரண்டு  சாணக்கியத் தலைவர்களாலும் அமைதியானது.

ஆனால்  இதை  நங்கு  உணர்ந்த  எமது  சாணக்கிய  தூரநோக்கு  சிந்தனைகள்  கொண்ட  தலைவர்கள்  மர்ஹூம்  ஏ, எல்,எம். மஜீத்  எம்,பி, அவர்களும், எம்,ஈ,எச் மஹ்ரூப்  எம், பி, அவர்களும்  மூதூர், தோப்பூர், கந்தளாய், முள்ளிப்பொத்தானை,  மற்றும் புல் மோட்டை என்ற  பிரதேசங்களை  அணைத்தும்  மாவட்டம்  தழுவிய  சேவைகளையும்  செய்து  கொண்டு  எமது  மாவட்டத்தின்  அதிகாரம் , அரசியல் நகர்வுகள்  அனைத்தையும்  தங்கள் ஆளுமைக்குள்  வைத்துக் கொண்டு  தேசிய  கட்சியின்  கொழும்பு  தலைமைக்கு  மாவட்டத்தின்  கட்டளைகளை  பிறப்பிக்கும்  தலைவர்களாக  இருந்தாா்கள்.

மூதூரில்  நத்வத்துல்  புஹாரி  என்றும்  கிண்ணியாவிலும்  அதே  பெயரில்  ஒரு  பள்ளிவாசலைக்  கட்டி  இரண்டிலும்  புஹாரி  கொண்டாடினார்  மஜீத்  எம், பி, அவர்கள்  மேலும்  1970 களில்  மூதூரிலும்  கிண்ணியாவிலும்  முற்ப்போக்கு  வாலிபர்  மன்றம்  என்ற  பெயரில்  சங்கம்  திறந்து  இரண்டு  ஊர்களிலும்  உள்ள  படித்த  இளைஞ்சர்களை  ஒன்றினைத்து   அந்த  அந்த  ஊரின்  பிரச்சனைகளுக்கு  அவர்கள்  மூலம்  தீர்வு கண்டார்.  அதே  நேரம்  விவசாயிகளை  அருகில்  வைத்துக் கொண்டு   அவர்கள்  பிரச்சனைகளுக்கு   தீர்வு கண்டாா்.  அதனால்  மூதூரின்  முத்து  கிண்ணியாவின்  சொத்து  என்றும்  மூதூர்  எம் பி  மஜீத்  நாநா  என்றும்  தமிழ்  மக்களினால்   புகழப்பட்ட   இவர்  1960ம்  ஆண்டு  பாராளுமனறம்  நூழைந்து  1977ல்  ஸ்ரீரிமா  அம்மையாரின்  தவரான  பொருளாதாரக்  கொள்கையால்   நாடு  தழுவிய ரீதியில்  இவரின்  ஸ்ரீலங்கா  சு  கட்சி  தோல்வி  கண்டதினால்  இவரும்  தோல்வி  அடைந்தாலும்  1987ம்  ஆண்டு  சுட்டுக்  கொலை  செய்யும்  அன்று  பகலும்  மூதூருக்கு  போய்  மக்கள்  சிறமங்களை  கேட்டறிந்த  ஒரு  சமமான  சிந்தனை  கொண்டவர்.

அதே  போல்  மஹ்ரூப்  எம்,  பி, அவர்களும்  குறைந்தவரல்ல,  தன்னுடன்  படித்தவர்களை  ஒரு  அணியாகவும்,  படிக்காதவர்களை  ஒரு  அணியாகவும்  வைத்து  அவர்  அவர்  பிரச்சனைகளை  தனியாக  கையாண்டாா்கள்.  தோப்பூர்  மக்கள்  பின்தங்கிய  நிலை  கண்டவர்  அந்த  மக்களை  உயர்வு  காணவைக்க  வேண்டும்  என்று  கூடுதலான  காலங்கள்  தோப்பூரில்  கழித்தவர். மூதூர்  இறங்குத் துறையை  நவீனமயமாக்கி ஏனைய  பிரதேச  மக்களை  தனது  நண்பர்களாக  எண்ணி  ஆட்சி செய்ததினால்  இவர் காலத்தில் 1989 களில் ஸ்ரீ, மு, காங்கிரசின்  பிரதேசவாதம்  மிகப்  பெரிதாக  வெற்றி பெறவில்லை  என்றுதான்  சொல்ல  வேண்டும்.  1977ல்  பாராளு மன்றம்  நுழைந்த  இவரும்  1997/07/19ம்  ஆண்டு  காலையில்  மூதூர்  மக்களை  சந்தித்து  சுகம்  விசாரித்து  தனது  மகளின்  குடும்ப  விவகாரங்களை  முடித்து  மூதூரில்  இருந்து  பயணமாகும்  போது  திருகோணமலையிலிருந்து  ஐந்து  கிலோ  மீட்டருக்கு  அப்பால்  சுட்டுக்  கொலை  செய்யப்பட்டாா்கள்.

இவருக்குப்  பின்னால்  வந்த  நஜீப்  ஏ  மஜீத்  எம், பி,  அவர்களும்  இவர்களைப் போல்  தனது  ஆள்மைகளை  ஓர்  அளவு கொண்டு  போனாலும்  காங்கிரசின்  வளர்ச்சியாலும், இவரின்  தவரான அரசியல்  அறிமுகமான  புஞ்சிநிலமையின்  நுழைவாலும்  ஈடு  கொடுக்க  முடியாமல்  போனது.

ஆனாலும்  இந்தக்காலப் பகுதியில்  பிரதேசவாதம்  கட்சி  ரீதியாகத்தான்  இருந்ததைத் தவீர  மக்கள் ரீதியாக  இருக்கவில்லை   அதனால்தான்  மூதூர்  மக்கள்  தெரிவான  திடீர்  தௌபீக்  அவர்களை  கிண்ணியா  மக்கள்  எம்,பியாக  ஆக்கினார்கள். அதே  நேரம்  மாகாணசபைத்  தேர்தலில்  ஹசன்  மௌலவிக்கு  அடுத்த  தெரிவாக  கிண்ணியா  லாபீர்  டொக்டர்  அவர்கள்  இருந்தாலும்  கிண்ணியா  மக்கள்  இரண்டாவது  தெரிவாக  லாஹிர்  லோயர்  அவர்களைத்  தெரிவு  செய்தாா்கள்

ஆனால்  தற்போதைய  மாவட்டம்  தழுவிய  பிரதேசவாதத்துக்கு  காரணம்  தற்போது  இருக்கும்  கிண்ணியா  அரசியல் தலைமைகள்  தான்  என்பதை  நாளை  பாா்ப்போம்.  தவருகள்  இருந்தாலும்  ஏதும்  முக்கியமான  விடையங்கள்  தலையங்கத்துக்கு  துணையுள்ள  நல்ல  தகவல்கள்  விடு  பட்டிருந்தாலும் தாழ்மையடன்  சுற்றிக்  காட்டவும்.

எமது  மாட்ட அரசியல்  நகர்வுகள்  எப்படி  மூத்த தலைமைகள்  வழி  நடத்தியது  என்று  பகுதி ஒன்றில்  கண்டோம்.  அதே  நேரம்  இடையில்  திட்டம் போட்டு திணிக்கப்பட்ட இந்த பிரதேசவாதம்  தற்போது  ஒரு  சுயகௌரவமான  பிரச்சனைகளாக  உருமாறியது  எப்படி  என்பதை  ஆய்வோம்.

அதாவது  1960ம் ஆண்டு  ஐ, தே, க     டி. எஸ், சேனாநாயக்காவுக்கு அப்புறம்  தலைமைத்துவம்  குடும்ப  வாரிசாக  டட்லி  அவர்களிடம் கை மாறிய  காரணத்தினால்  உற்கட்சி  பூசலினால்  உதயமானது  ஸ்ரீ, சு க. இது  மர்ஹூம்  மஜீத்  எம்,பி,  அவர்களை மாவட்டத் தலைவராகக்  கொண்டு  இயங்கியதினால்   மூதூர்  தொகுதியை  ஐ, தே, க கைவசப்படுத்த  முடியாமல்  போனதாலும்  சுதந்தரக்  கட்சியை  பழவீணப்படுத்தவும்  மூதூரில்  இருந்து  தோப்பூரை  ஐ, தே, க.  பிரித்தாள நினைத்து  1977லில் வெற்றி  கண்டது.

இதனால்  மூதூரில்  மஜீத் எம்,பி. அவர்களும்  தோப்பூரில்  மர்ஹூம்  மஹ்ரூப்  எம், பி  அவர்களு ம் செல்வாக்குப்  பெற்றனர்,  இந்தக்  காலகட்டத்தில்தான்  திருகோணமலை  முஸ்லிங்களின்  வாக்குகளை  குறிவைத்து ஸ்ரீ.மு, க. மூதூர்  தொகுதியை  மையமாக் கொண்டு  களம்  இறங்கும்   அதே  நேரம்  கிண்ணியாக் காரனை  வெட்டினாலும்  பச்சை  மற்றும்  நீலம்  இரத்தம்தான்  ஒடும்  என்று  எண்ணி  மூதூர்  மக்களை  குறிவைத்து  கிண்ணியாவுக்கு  எதீரான  பிரதேசவாதம் தோன்றுகின்றது.  இதனால்  1989 இருந்து  2004 வரைக்கும்  கொடி  கட்டிப்பறக்கத்  தொடங்கியது  மாவட்டத்தில்  காங்கரஸ்  என்றால்  மிகையாகாது.

ஆனால்  மூதூரின்  பிரதேசவாதம்  கடல் நீரினால்  மக்கள்  பிரிந்து  கிடக்கும்  வரைதான்  தாக்குப் பிடித்தது.  நாளு  பாலங்களும்  வந்து  மக்களை  ஒன்று பட வைத்ததினால்  மக்கள்  ஒருவர்  ஒருவருக்குள்  பேசி  உறவு முறை  கொண்டாடி  புரிந்துணர்வுகள்  கண்ட பின்னாடி  பிரதேசவாதம்  சொல்லி  மக்களை  ஏமாற்றிய  கூட்டங்கள்  அணாதைகளாகக்  கைவிடப்பட்டாா்கள். பிரதேசவாம்  தோல்வியும்  கண்டது.  தற்போது  தேசியப் பட்டியல் ஆசனத்தைக்  குறிவைத்து  காய்  நகர்த்தப் படுகின்றது  வேறு  விடையம்.

மேலும், முள்ளிப்பொத்தானையை  எடுத்துக் கொண்டால்  அங்கு  பிரதேசவாதம்  வெற்றியளிக்க  வில்லை  காரணம்  உறவு  முறை  கிண்ணியாக் காரனின்  வழித் தோற்றல்களினால்  வந்த  மக்கள்  நிலத்தினால்  தொடர்பு  வெளி  மாவட்டங்களுக்கு  போகும்  போதும்  வரும்  போதும்  மாமா,  மச்சான், காக்கா, சாச்சா  என்று  உறவு முறையினால்  அவ்விடம்  நின்று  சுகம்  விசாரிக்கும்  முறை  கிண்ணியாக்காரனிடம்  அன்றில்  இருந்து  இன்று  வரை  நீடிக்கின்றது.  மீன்,  மரக்கறி, நெல்  மாடு,  காணி  என இன்னும் பல  வியாபாரங்களினால்  பரஸ் பரம்  ஒன்றினைந்த  மக்கள்  மற்றும்  தமிழ் மொழியின்  உச்சரிப்பு   கல்வி , ஓதல்  என்று  இன்னும் பல  இரண்டு  ஊர்களுக்குள்ளும்  ஒன்று பட்ட  ஒற்றுமை.

 அப்படி  இருந்தும்  ஏன்  இந்தப்  பிரதேச வாதம் வந்தது  என்றால்;  மக்கள்  மத்தியிலிருந்த  சுயமரியாதை  அதாவது  சுயகௌரவத்தை  பிரதேசவாமாக  அரசியல்வாதிகள் தங்களது  சுயநலத்துக்காக  வேண்டி  உரு மாற்றிக்காட்டியதுதான்  இந்த  பிரதேசவாதம்.  மக்கள்  என்றும்  ஒன்றுமைதான்  என்பதை  இன்ஷாஅல்லாஹ்  நாளை  ஆராய்வோம்.  ஏதும்  விடுபட்டு  இருந்தால்  எடுத்துரைக்கவும்.

          நன்றி,
                    ஐனுதீன், கிண்ணியா.
                 

Comments