நிஸாம் காரியப்பருக்கு புதிய செயலாளருக்கான உத்தியோக பூர்வ கடிதம் வழங்கிவைப்பு
கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உத்தியோகபூர்வ செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை உறுதிப்படுத்தி தேர்தல் ஆணையாளரால் வழங்கப்பட்ட கடிதம், கட்சி தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களால் நேற்று கட்சியின் செயலாளருக்கு தாருஸ்ஸலாமில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், வட மாகாண சபை உறுப்பினர் எச்.எம்.எம். ரயீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோரும் கலந்துகொண்டனர்


Comments
Post a Comment