தூக்கில் தொங்கி குடும்பஸ்தார் பலி


குடும்பஸ்தார் ஒருவர் தனது மனைவியை உறவினர் வீடொன்றுக்கு அனுப்பி விட்டு தூக்கில் தொங்கி  உயிரிழந்த பரிதாப சம்பவம் திருகோணமைல மாவட்டத்தில்  தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் நேற்று  (19) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம் பகுதியில் 656 தாயிப் நகரைச் சேர்ந்த அப்துல் அஸன் - அப்துல் அலீம் (வயது- 53) என்பவராவர்.

இது தொடர்பாக தம்பலகாமம் பொலிஸார்  பொலிஸார் விசாரணையை மேற் கொண்டுள்ளனர்.

இவர் ஏற்கனவே வேறு திருமணம் முடித்தவர் எனவும், அவரது முதல் திருமணத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு இன்று நீதிமன்றத்தில் பணம் கட்ட வேண்டியுள்ளதாகவும் மன உளைச்சலில் இருந்தததாகவும் இதுவே காரணமாக இருக்கலாம் என குடும்பத்தினர்கள்  தெரிவித்தனர்.

இவரது சடலம் மேலதிக விசாரணைக்காக திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Comments