கதுருவெல,முஸ்லிம் கொலனியில் பெரும் எண்ணிக்கையிலானோற்க்கு சீனி.அதிகமானோர் பெண்கள்.

Ariff S Naleem
இன்று 27/10/2017 கதுருவெல,முஸ்லிம் கொலனி பச்சை பள்ளிவாயல் மேல்மாடியில் பொலன்னறுவை அரச வைத்திய சாலை வைத்திய அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச வைத்திய முகாமில் முஸ்லிம் கொலனி வடக்கைச்சேர்ந்த 187 பேர் பங்குகொண்டிருந்தனர்.

இவர்களின் இரத்தம் மற்றும் சிறு நீர் மாதிரிகள் பெறப்பட்டன. இதன் போது 146 பேர் கடும் சீனி நோயினால் பாதிப்படைந்திருப்பதாகவும் அதில் பெண்களே அதிகம் எனவும் வைத்தியர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.

இந்த பரிசோதனைகள் தனியார் வைத்திய நிலையங்களில் மேற்கொள்ள மூவாயிரம் ரூபா வரை செலவாகும் எனவும் தாம் இலவசமாகவே வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும் ஆனாலும் அதிக சனத்தொகையினை கொண்ட முஸ்லிம் கொலனி கிராமத்திலிருந்து வெறும் 187 பேரே இன்று தமது உடல் நிலையினை பரிசோதனை செய்து கொண்டதாகவும் அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்தார்.

இன்று காலை 9:00 மணி தொடக்கம் பி: ப 2:30 வரை இவ் இலவச வைத்திய முகாம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments