கிண்ணியா மணியரசங்குளத்தில் ஹில்மி மஹ்ரூப்புக்குமிடையிலான மக்கள் சந்திப்பு
திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணியரசன் குளம் பிரதேச மக்களுக்கும் கிண்ணியா நகர சபையின் முன்னால் தவிசாளர் ஹில்மி மஹ்ரூப்புக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் (28) நஸீர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்களின் முஸ்லிம்களின் நிலைப்பாடு போன்றன பற்றியும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
ஷாபியா விளையாட்டு கழக இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது.
இதில் பள்ளிவாயல் தலைவர் மற்றும் மணியரசங்குளம் பிரதேச முக்கியஸ்தர்கள் பலர்ரும் கலந்து கொண்டார்.



Comments
Post a Comment