ஒரே பாசறையில் வளர்ந்த துருவங்கள்--சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்
இந்த சமூகத்திற்கு குர்ஆனையும்,ஹதீஸையும்,இனவாத உணர்வுகளையும் காட்டி உங்களை வளர்த்ததை தவிர சாதித்து என்ன??
நீங்கள் இருவரும் தற்போது இருக்கும் இடம் வேறாக இருந்தாலும்,,பிறந்ததும்,வளர்ந்ததும் ஒரே பாசறையே.0வாக வந்து 100ஆக வளர்ந்துள்ளீர்கள்.உங்களுக்கு இனி கிடைப்பதெல்லாம் போனஸ்.இதனால் சமூக அக்கறை அற்ற ஜடமாகிவிட்டீர்கள்.
கேவலம் எத்தனை ஆட்சியாளர்களுடன் மாறிமாறி ஓடுனீர்கள்.,எத்தனை அமைச்சுக்கள்.சோரம் போனதைவிட சாதித்தது என்ன.2000ம் ஆண்டுமுதல் இந்த சமூகம் தொடர்ச்சியாக பலவற்றை இழந்து வருகிறது.உங்கள் பதவிகளும்,சுகபோக வாழ்க்கையும் மட்டுமே நிரந்தரமாக உள்ளது.
கரையோரமாவட்டம்/தனி முஸ்லீம் அலகு அவசியமா? என்பது பிரிதான விவாதமாகும்.ஆனால் இதனை வைத்து இந்த சமூகத்தை எவ்வளவு காலம் ஏமாற்றி வருகின்றீர்கள்.
ஒன்றுமட்டும் உண்மை பிரிந்த வடகிழக்கு மாகாணங்களை இணைக்க TNA அடித்தளமிட்டுள்ளது.இருந்தும் கிழக்கில் அதிகமாக வாழ்கின்ற சிங்களப் பெரும்பான்மையால் இது ஒருபோதும் இடம்பெறப் போவதில்லை.
இருந்தும் உத்தேச அரசியலமைப்பு வரைவில் வடகிழக்கு இணைப்பு பற்றிய வாசகத்தை சேர்த்ததே உங்களது வங்குரோத்துக்கு சான்றாகும்.
1989ம் ஆண்டு முஸ்லீம் மாகாணம் என்று தொடங்கி,கரையோர மாவட்டமாக பரிணாமம் எடுத்து தற்போது கல்முனை தனிஅலகாக விஷ்பரூபம் எடுத்துள்ளது.
பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மைக்கு ஆதரவு அளித்து சமூகத்தைகாட்டிக் கொடுத்த நீங்கள்??ஆயிரம் சாட்டுக்களுடன் கதைகூறுகின்றீர்கள்.உங்கள் கையை பராளுமன்றத்தில் யாரோ உயர்த்திவிட்டார்கள் என்றகூட ரீல்விடுவீர்கள்.
நீங்களோ இருக்கின்ற பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கு ரணில்,சுமேந்திரனுக்கு பயந்து கைஉயர்த்திவிட்டீர்கள்.உங்கள் கரிஸ்பத்துவ தொகுதி வெற்றிக்காக ஒரு பொதுமனிதராக அடையாளம் காட்டி முழுச் சமூகத்தையும் காட்டிக் கொடுத்துவிட்டீர்கள்.
திவிநெகும ,மாகாணசபை சீர்சிருத்த சட்டம் மற்றும் 18,20 என்று தொடர்ச்சியாக கள்ளத்தனமாகவும்,துரோகமாகவுமே செயற்படுகின்றீர்கள்.இறுதியாக அரசயலமைப்பு மாற்றத்திற்கும் கையாட்டிவிட்டு தற்கொலை செய்துவிடுங்கள்.உங்கள் பாவத்துக்கு பரிகாரமாக இருக்கும்.
சாணாக்கியம்,சாணாக்கியம் என்று சமூகத்தை இறுதியில் சுடுகாட்டிற்கு அனுப்பிவிட்டீர்கள்.உங்கள் சாணாக்கியமும்,சலப்பு வார்த்தைகளும் இந்த சமூகத்தில் எடுபடப் போவதில்லை..
மேலும் கடந்தகாலங்களில் கிழக்கில் வளர்ச்சிகண்ட ACMC மயில்கட்சித் தலமைகூட துரோகத்திற்கு துணைபோனது புதிய விடயமல்ல.SLMC மீது மக்கள் கொண்ட அதிருப்தியாலே உங்கள் மீது நம்பிக்கை வைத்தனர்.ஆனால் உங்களின் வங்குரோத்து அரசியலையும் பிறவிக் குணத்தையும் காட்டிவிட்டீர்கள்.
கட்சிபோனாலும்,தலமைப் பதவி போனாலும் கரிஷ்பத்துவ ஹகீமுக்கு உள்ளது.உங்களுக்கு புத்தளமா அல்லது எரிக்கலம்பிட்டியில்(மன்னார்)ஏதாவது தொகுதி அமைக்க உள்ளீர்களா?
குறைந்தபட்சம் எமது மாவட்ட முஸ்லீம் கட்சி 2பிரதிநிதி மற்றும் 2மாகாணசபை பிரதிநிதிகளே??????? இந்தக் கேள்விகளுக்கு பகிரங்கமாக பதில்கூறமுடியுமானால் உங்களுக்கு மனச்சாட்சியும் ரோசமும் இருக்குமென சமூகம் நம்பிக்கை கொள்ளும்்.
1-புதியமுறையிலான தேர்தலுக்கு முன்னர் எல்லை நிர்ணயம் 2/3 பாராளுமன்ற ஆதரவு இல்லாமல் சாத்தியமா?
2-ஆதரவு இருந்தால் எமது மாவட்ட தொகுதி மற்றும் விகிதாரப் பங்கீடு என்ன?
3-ஆதரவு தோற்கடிக்கப்பட்டால் இருக்கின்ற தொகுதிமுறையில் தேர்தல் நடந்தால் எமது பிரதிநிதித்துவம் என்ன?
4-20வது சட்டத் திருத்தத்தை முழுமையாக வாசித்தா கைஉயர்த்தினீர்கள்?
5-புதிய திருத்தம் மூலம்எமது மாவட்டத்தின் முஸ்லீம் மாகாண மற்றும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறையுமா?அதிகரிக்குமா?
6-சாத்தியமோ??இல்லையோ...புதியஅரசியலமைப்பு வரைபில் வடகிழக்கு இணைப்பு சேர்க்கப்பட்டதற்கு உங்களுக்குத் தெறியுமா?
7-எதற்கும் வியாக்யாணமும்,விதண்டாவாதமும் கைஇருப்பில் வைத்திருக்கும் உங்களுக்கு சமூகத்திடம் முகம்கொடுக்க வெட்கமில்லையா?
8-கடந்த காலத்தில் திவிநெகும,18வது சட்டங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஆதரித்தீர்கள்.பின்னர் தவறு செய்து விட்டதாக கண்ணீர் வடித்தீர்கள்.தற்போது செய்துள்ள துரோகத்திற்கு எப்போது அழுவீர்கள்?
9-திருகோணமலை மாவட்ட முஸ்லீம்களின் எதிர்கால அரசியலில் உங்களால் வெற்றிபெற முடியுமென நினைக்கின்றீர்களா?
10-ரணில் உங்களுக்குத் தந்த வாக்குறுதி என்ன?இதற்கு என்ன உத்தரவாதம்..சட்டம் ஏற்கனவே 2/3 பெரும்பான்மையால் நிறைவேறிவிட்டது.உங்களுக்கு ரணில் ஆப்பு வைத்தால் இந்தச் சட்டத்தை எப்படி மாற்றுவீர்கள்.அதிக பட்சம் கட்சி மாறி மஹிந்தவிடம் போவீர்களா?அல்லது அரசியலை விட்டே ஓடுவீர்களா?
11-பலரும் விமர்சிக்கின்றதும் எதிர்ப்பதும் போன்று இந்ததிருத்தச் சட்டத்தால் சமூகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டால்,நீங்கள் சமூகத்திற்காக உயிர்விடுவீர்களா?உங்களுக்கு சமூகத்தில் மாவீரர் பட்டம் காத்திருக்கிறது.
இதற்கு பதில்தரமுடியுமா?அபிவிருத்தி ,சாதனை மற்றும் விளம்பரங்களை விடுத்து மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.உங்களுக்கே தெளிவில்லாத விடயத்தில் மக்களை மடையர்களாக வைத்திருக்க முயலவேண்டாம்.
இந்திராகாந்தி,பண்டாரநாயக்கா,மகாத்மாகாந்தி,கடாபி,அல்பிரட்துரையப்பா போன்றவர்களுக்கு அவர்கள் உணர்ச்சிகளுக்கு உசிப்பாட்டி வளர்த்த சமூகமே வேட்டாக மாறியது வரலாறு.
ஆகவே தொடர்ந்து இந்த சமூகத்தை விலைபேசி சந்தைப்படுத்த வேண்டாம்.உங்களுக்கு எதிராக மாறும்.
ஆகவே மஹிந்த அரசைவிட கொடூரமான நல்லாட்சியின் வற்புறுத்தலுக்கு அடிமையாகி உள்ளீர்கள் என்பது நிதர்சனமாகும்.இதற்கு உங்கள் பதவி மற்றும் பணத்தின் மீதுள்ள பலவீனமே மூலகாரணம்.
FAHMY MOHAMED-UK
Mob:00447870763570


Comments
Post a Comment