கந்தளாய் பிரதான வீதியில் பலசரக்குக் கடை உரிமையாளரை தாக்கி அவரிடமிருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் பிரதான வீதியில் பலசரக்குக் கடை உரிமையாளரான அருண சிறிசேன (40) நேற்றிரவு(19) வீட்டுக்கு போகும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத குழுவினர் அவரை கடுமையாக தாக்கி அவரிடமிருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த வியாபாரி கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Comments
Post a Comment