கிண்ணியாவில் யாப்புத்திருத்தம், வட்டார பிரிப்பு சம்பந்தமான கலந்துரையாடல்
திருகோணமலை கிண்ணியா சூறா சபையின் ஏற்பாட்டில் யாப்புத் திருத்தம், உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரப் பிரிப்பு,மற்றும் மாகாண சபைகளுக்கான தொகுதி நிர்ணயம் சம்மந்தமான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை(22) காலை 9.30 மணியளவில் கிண்ணியா துறையடி நகர சபை விடுதி மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முஸ்ஸீம் சமூக நிறுவனங்களின் ஒன்றிய தலைவர் டொக்டர் வை.எல்.எம். யூசுப் மற்றும் கிண்ணியா ஐம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி ஏ.எம்.ஹிதாயத்துள்ளா(நளிமி),கிண்ணியா நகர சபையின் முன்னால் தவிசாளர் சட்டத்தரணி ஹில்மி உட்பட திருகோணமலை மாவட்ட முஸ்லீம் சமூக நிறுவனங்களின் முக்கிய பிரதி நிதிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.




Comments
Post a Comment