அரம்பேபொல ரத்னசார தேரர் கைது


சிங்கள ஜாதிக்க பலவேகவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிசையில் UNHCR அனுசரணையில் தங்கவைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியமை தொடர்பில் கடந்த சில வாரங்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நிட்டம்புவ பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்த நிலையில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து இரு தேசிய அடையாள அட்டைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

Comments