(UPDATE) ஆர்ப்பாட்டத்தினால் ஹட்டன் நகரில் பதற்றம் – கடைக்கு சேதம்
ஹட்டனில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக நகரில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் பெயர் அண்மையில் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்பாட்டகாரர்கள் தாக்கியதில் ஹட்டன் நகரில் கடையொன்று சேதமடைந்ததாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தின் பெயர் பலகை மீண்டும் அமைக்கும் வரை மலையகத்தின் நகரங்களிலும், தோட்டங்களிலும் போராட்டங்கள் வெடிக்கும் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது


Comments
Post a Comment