கிந்தொட்ட பதற்ற நிலை: இதுவரை 19 பேர் கைது – பொலிஸ்
கிந்தொட்ட பிரதேசத்தில் நேற்றிரவு(17) இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது நிலைமை சீராகவுள்ளதாகவும் இன்று காலை 9.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்ற பதற்ற நிலைமையின் போது பள்ளிவாயல், வீடுகள், வியாபார நிலையங்கள் என்பன தீ வைக்கப்பட்டும், கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியும் இருந்தன. பொலிஸார் குவிக்கப்பட்ட போதும் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதனால் அப்பகுதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment