நாளை 2 மணிமுதல் நாட்டின் சகல பகுதிகளுக்கும் பெற்றொல்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் டுபாயிலிருந்து கொள்வனவு செய்துள்ள 40000 மெட்ரிக் டொன் பெற்றோல் இன்று (08) நள்ளிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கப்பலில் 92 ஒக்டைன் ரக பெற்றோல் 32500 மெட்ரிக் டொன்னும், ஒக்டைன் 95 இற்கான பெற்றொல் 7500 மெட்ரிக் டொன்னும் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்த கப்பல் இன்றிரவு 11.30 மணிக்கு கொழும்பை வந்தடையவுள்ளதாகவும், வந்தவுடன் இரசாயனப் பகுப்பாய்வுக்கு இரவோடிரவாகவே அனுப்பி வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
நாளை பிற்பகல் 2.00 மணி முதல் நாட்டின் சகல பகுதிகளுக்கும் பெற்றோல் விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பெற்றோலிய வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.


Comments
Post a Comment