கொழும்பிலிருந்து யாழ். சென்ற பஸ் விபத்து! நால்வர் பலி, 30 பேர் படுகாயம்
புத்தளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்துள்ளவர்கள் புத்தளம் மற்றும் முந்தல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Comments
Post a Comment