வாசித்து விட்டீர்களா...!!

Ashraf Ibnu Sulthan

#அர்ரஹீக்_அல்_மக்தூம் என்ற நூல், "ஷபியுர்ரஹ்மான் முபாரக்புரி" என்பவரால் எழுதப்பட்டது. இவ்வுலகின் இறுதித்தூதர் முகம்மது நபிஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆதாரபூர்வமான வாழ்க்கை வரலாற்று நூலாகும். சர்வதேச போட்டியில் முதல் பரிசு பெற்றது.

நூலின் இப்பின்னணியை தொரிந்து கொண்டால் இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நூல் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.இந்நூலுக்கு ஆசிரியர்வைத்த பெயர்’#அர்ரஹீக்குல்_மக்தூம்” என்பதாகும்.‘#முத்திரையிடப்பட்ட #உயர்ந்த_மதுபனம்” என்பது அதன் அர்த்தம். அல்லாஹ்வின்நெருக்கத்தை அடைந்த உயர்ந்தோருக்கு இவ்வகை மது சுவர்க்கத்தில் வழங்கப்படும் என்று அல்குர்ஆனில் (83 : 25) கூறப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, படிப்பவருக்கு சுவையாகவும் இனிமையாகவும் இருக்கிறது என்பதால், நபியவர்களைப் பற்றிய தனது நூலுக்கு உவமை அடிப்படையில் இந்தப் பெயரை ஆசிரியர்சூட்டியுள்ளார்.

 ஹிஜ்ரி 1396 ஆம்ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் (1976 மார்ச்) பாகிஸ்தானில் நபி முஹம்மது ஸல்லாஹ{ அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த உலகளாவிய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் ராபிததுல் ஆலமில் இஸ்லாமி என்ற பெயரில் மக்காவை தலைமையமாகக் கொண்டு இயற்கி வரும் இஸ்லாமிய நிறுவனம் கீழ்கண்ட ஓர் அறிவிப்பபை வெளியிட்டது. அதற்குரிய நிபந்தனையையும் வெளியிட்டது. பல மொழிகளில் மொத்தம் 1182 ஆய்வுகள் அனுப்பட்டன.அவற்றில் 183 ஆய்வுகள் மட்டுமே நிபந்தனைக்குட்பட்டு இருந்ததால் அவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு,அவற்றில் 5 ஆய்வுகள் முதல்தரம் வாய்ந்தாக முடிவு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அறிஞர் ஸஃபியுர் ரஹ்மான் முபாரக் பூரி -இந்திய அவர்களின் (அரபி) ஆய்வு முதல் பரிசு பெற்றது.பரிசுத்தொகையாக 50,000.00 ரியால்கள் வழங்கப்பட்டன.

நபி ஸல்லாஹு அழைகி வஸல்லம் அவர்களை நம் உயிரணும் மேலாக நேசிப்போம். ஆனால் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறியாமலே இருக்கின்றோம்.

ஒவ்வொருவரும் படித்து தெரிந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய நூல்.யூத கிறிஸ்தவ விசமிகளின் கருத்துக்களையும் ஆய்வுகளையும் தேடிப்படிக்கின்றோம், ஆனால் இது போன்ற இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் விடயங்களை விட்டு விடுகின்றோம். 

இந்நூலை தரவிறக்கம் செய்து கொள்ள- http://www.islamkalvi.com/?p=4989

Comments