வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை
எப்.முபாரக்
கிண்ணியா பிரதேச சபைக்கு உட்பட்ட சல்லிக்களப்பு பிரதான வீதியில் மழை நீர் தேங்கி பயணிகள் செல்ல முடியாது சேறும், குன்றும் குழியுமாக உள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொது மக்கள் பயணம் மேற்கொள்ள முடியாது கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
குறித்த வீதியானது பல பிரதேச மக்களின் பிரதான வீதியாகவுள்ளது.
ஆலங்கேணி, சல்லிகிளப்பு , நெடுந்தீவு , மகமாறு, ஈச்சத்தீவு, நடு ஊற்று, கல்லறப்பு , பட்டியான் குளம், உள்ளிட்ட பிரதேச மக்கள் அதனைப் பயன்படுத்துகின்றார்கள்.
ஆலங்கேணி, சல்லிகிளப்பு , நெடுந்தீவு , மகமாறு, ஈச்சத்தீவு, நடு ஊற்று, கல்லறப்பு , பட்டியான் குளம், உள்ளிட்ட பிரதேச மக்கள் அதனைப் பயன்படுத்துகின்றார்கள்.
குறித்த வீதியானது சுமார் ஒரு கிலோ மீற்றர் சேதமடைந்து நீர் தேங்கி குன்றும் குழியுமாக தற்போது பெய்துவரும் அடை மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியின் நடுவில் எச்சரிக்கை பலகையும் நடப்பட்டுள்ளது.
குறித்த வீதியின் நடுவில் எச்சரிக்கை பலகையும் நடப்பட்டுள்ளது.
இதனூடாக பயணிக்க கூடியவர்கள் குறிப்பாக பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், வயோதிபர்கள், வீவசாயிகள் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தும் எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை என பிரதேச வாசிகள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
குறித்த வீதியை புனர்நிர்மானம் செய்து தருமாறு பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கின்றார்கள்.

Comments
Post a Comment