உலப்பன பகுதியில் மண்சரிவு: வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை


நாட்டில் நிலவி வரும் கடும் மழையுடனான காலநிலையின் காரணமாக ஹட்டன், கண்டி பிரதான வீதியில் உலப்பன பகுதியில் இன்று மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அப்பகுதியுடனான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக இடம்பெறுகின்றது.

குறித்த பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளதோடு, வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

Comments