திருகோணமலையில் விடொன்றிற்கு கைகுண்டு தாக்குதல் நடாத்திய பெளத்த பிக்குவுக்கு விளக்கமறியல்.


திருகோணமலை ஆண்டாங்குளம் பகுதியில் விடொன்றிற்கு கைகுண்டு தாக்குதல் நடாத்தியதாக சந்தேகிக்கப்படும் பிரதான பெளத்த பிக்குவை இம்மாதம் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு (18) திருகோ ணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட் டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக் கப்பட்டுள்ளவர் திருகோணமலை 04ம் கட்டை சிறி வஜிரா ராமய விகாராதிபதி ஆண்டாங்குளமே
சோமரத்ன ஹிமி என உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


2016 பெப்ரவரி மாதம் 14ம் திகதி இரவு 04ம் கட்டை விகாரைக்கு அருகிலுள்ள விடொன்றிற்கு கைக்குண்டு தாக்குதல் நடாத்தியதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து அவ்விடத் திற்கு விரைந்த பொலிஸார் அதே நேரம் விகாரைக்குள் மறைந்திருந்த இரண்டு பேரை கைது செய்து விசா ரணைகளை முன்னெடுத்த போது பிரதான சந்தேக நபர் பெளத்த பிக் குவென இனங்காணப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை மேல் நீதிமன்றம் பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியது.

இதேவேளை கை குண்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெளத்த பிக்கு சம்ப வம் நடைபெற்ற நாள் முதல் தலை மறைவாகியிருந்த நிலையில் (12) உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.


இதனையடுத்து கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எம்.எம்.ஹம்ஸா முன் னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்த ரவிட்டார்.

Comments