வவுனியா செட்டிகுளத்தில் கோயிலிலிருந்த பிள்ளையார் சிலைகள் உடைப்பு
வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் பிள்ளையார் சிலைகள் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன். சம்பவம் தொடர்பாக ஆலய பரிபாலன சபையினர் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


Comments
Post a Comment