கிண்ணத்தை வென்றது கதுருவெல ரெட் சன் அணி

Ariff S Naleem

மூத்த விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் முகமாக கதுருவெல BLUE STAR விளையாட்டுக்கலகம் ஏற்பாடு செய்திருந்த அணிக்கு அறுவர் அடங்கலாக நான்கு ஓவர்களைக்கொண்ட மென் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று 03/11/2017 முஸ்லிம் கொலனி சியானா அரிசி ஆலை எதிரே நடைபெற்றது.16 அணிகள் பங்கு கொண்ட இச்சுற்றுப்போட்டியில் RED SUN அணி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

போட்டி நிறைவில் முப்பது மூத்த வீரர்களுக்கும் ஆறு இளைய வளர்ந்து வரும் வீரர்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும். ஆட்ட நாயகனாக RED SUN அணி சார்பாக விளையாடிய பசீர் சிராஸ் தெரிவானார்.

Comments