திருகோணமலையில் கெப் வாகனம் மோதி பதினொரு பேர் வைத்தியசாலையில்
எப்.முபாரக்
2017-11-27. திருகோணமலை வான் எல பொலிஸ் பிரிவுற்க்கு உட்பட்ட மணிராசன்குளம் பிரதேசத்தில் கேப் வாகனம் ஒன்று மரத்துடன் மோதியதில் அதில் பயணித்த பதினொரு பேர் பலத்த காயங்களுடன் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து சம்பவம் இன்று(27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த பதினொரு பேரும் திருகோணமலை தம்பலகாமம் ஆடைத்தொழிற்சாலையின் பெண் ஊழியர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்களில் இருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர பிரிவில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றன சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வான்எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Comments
Post a Comment