இறக்கக்கண்டி நூரானியா முன்பள்ளி பாடசாலையின் கௌரவிப்பு விழா.

எப்.முபாரக்  

இறக்கக்கண்டி நூரானியா முன் பள்ளி பாடசாலையின் கௌரவிப்பு நிகழ்வு இறக்கக்கண்டி அல் கம்ரா  முஸ்லிம் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று 26 நடைபெற்றது.      
நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முன்னாள்  கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சுகாதார பிரதி  அமைச்சரின் இணைப்பு செயலாளருமான ஆர்.எம்.அன்வர் கலந்து கொண்டு பரிசில்களையும் வழங்கி கெளரவித்தார். நிகழ்விற்கு கட்சியின் உயர்பீட உறுப்பினர் அல் ஹாஜ் ஏ.எம்.அன்சார்,  ஜே.எம்.நளீம்,அல் கம்ரா ஆண்கள் பாடசாலையின் அதிபர் எம்.பாஸ்மில்,இரக்கக்கண்டி  வாலையூற்று முன் பள்ளி முகாமைத்துவ தலைவர் சமூன்,உறுப்பினர் ரவுபீக் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.    





Comments