காலி, ஜிந்தோட்டையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விஜயம்

(உங்கள் நண்பன் தமீம்)

காலி, ஜிந்தோட்டையில் நேற்றிரவு இனவாத சக்திகள் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட தாக்குதலையடுத்து, அங்கு பதற்றநிலை தோன்றியுள்ள சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று (18) சம்பவ இடத்துக்கு நேரடி விஜயம் மேற்கொண்டார்.
அமைதியை நிலைநாட்டும் நோக்கில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸ்மா அதிபர் பூஜீத் ஜயசுந்தரவுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடினார். அத்துடன் இன்று மாலை நேரங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவகையில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் வீடுகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு இதுதொடர்பில் அமைச்சு மட்டத்தில் பேசி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.







Comments